சென்னை : கிரிக்கெட் விளையாட வயது ஒரு தடையில்லை பிரவீன் தாம்பே போன்ற வீரர் 40 வயதுக்கு மேல் தான் ஐபிஎல் தொடரிலே விளையாடினார். தற்போது இம்ரான் தாகிர் 40 வயதுக்கு மேல் காரேபியன் கிரிக்கெட் லீக் தொடர் சாம்பியன் பட்டத்தை வென்றிருக்கிறார்.
இனி உங்களுக்கு கிரிக்கெட் விளையாட வாய்ப்பு கிடையாது என அனைவரும் முத்திரை குத்திய பிறகு தான் தினேஷ் கார்த்திக் தன்னுடைய 37 வயதில் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் விளையாடினார்.

இந்த நிலையில் தமிழக கிரிக்கெட் வீரர் ஒருவர் இந்திய அணியில் சேர்த்துக் கொள்ளுங்கள் நான் தயாராக இருக்கிறேன் என்று கூறியிருக்கிறார். அவருக்கு வயது தற்போது 43 ஆகிறது. அது வேறு யாரும் இல்லை சிஎஸ்கே அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக ஒரு காலத்தில் இருந்த தமிழக வீரர் சுப்பிரமணியம் பத்ரிநாத் தான். பத்ரிநாத் இதுவரை இந்தியாவுக்காக இரண்டு டெஸ்ட், ஏழு ஒருநாள் மற்றும் ஒரு டி20 போட்டிகளில் விளையாடிருக்கிறார்.
ஐபிஎல் தொடரில் 2008 ஆம் ஆண்டு முதல் 2013 ஆம் ஆண்டு வரை 95 போட்டிகளில் விளையாடி இருக்கிறார். தற்போது கிரிக்கெட் வர்ணனையாளராகவும் பயிற்சியாளராகவும் தன்னுடைய பணியை பத்ரிநாத் மேற்கொண்டு இருக்கிறார்.இந்த வகையில் பத்ரிநாத் போட்ட ஒரு ட்விட்டர் தற்போது ரசிகர்களின் கவனத்தை எடுத்துக் கொண்டிருக்கிறது. உலகக்கோப்பை கிரிக்கெட்டோடு ஆசிய விளையாட்டுப் போட்டிகளும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
இந்த போட்டி தற்போது சீனாவில் நடைபெறுகிறது.இதற்கு இந்திய அணி தங்களுடைய இரண்டாம் பட்ச வீரர்களை தேர்வு செய்து ருதுராஜ் தலைமையில் அனுப்பி இருக்கிறது.
இது குறித்து தான் தற்போது பத்ரிநாத் ஒரு டிவிட் போட்டிருக்கிறார்.சீனா ஒரு கிரிக்கெட் பிரதேசம் கிடையாது. எனினும் அங்கு கிரிக்கெட் மைதானங்கள் இருக்கிறது.அது சர்வதேச தரத்தில் இல்லாமல் மிகவும் சிறிய மைதானமாக காட்சியளிக்கிறது.
இன்னும் சொல்லப்போனால் பவுண்டரி வெறும் 45 முதல் 50 மீட்டர் வரை தான் இருக்கும் என தெரிகிறது. இந்த மைதானம் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வந்தது. இதனை குறிப்பிட்டு பத்ரிநாத் இவ்வாறு கிண்டலாக டிவிட் போட்டு இருக்கிறார்.அதில் ஆசிய விளையாட்டுப் போட்டிக்கு இதுதான் மைதானம் என்றால் நான் 43 வயதில் இந்திய அணிக்காக விளையாடுவதற்கு நான் தயாராக இருக்கிறேன். பந்துவீச்சாளர்கள் என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்கள் என்று பத்ரிநாத் கிண்டல் எடுத்திருக்கிறார்