Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

விராட் கோலியோட ரன்-அவுட்... கிரிக்கெட் விரும்பிகளுக்கு மிகப்பெரிய அவமானம்... ஷேன் வார்ன் கருத்து

அடிலெய்ட் : விராட் கோலியின் ரன் அவுட் கிரிக்கெட் காதலர்களுக்கு மிகப்பெரிய அவமானமாக அமைந்துள்ளதாக முன்னாள் ஆஸ்திரேலிய ஸ்பின்னர் ஷேன் வார்ன் குறிப்பிட்டுள்ளார்.

விராட் கோலி அவுட் ஆகும்போது தன்னுடைய அணியின் ஸ்கோர் பெரியதாக இருக்க வேண்டும் என்பதில் தீவிரமாக இருப்பார் என்றும் அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

ஆனால் விராட் கோலியின் இந்த அவுட் மிகப்பெரிய ஏமாற்றத்தை அளித்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

விராட்டின் ரன் அவுட்

விராட்டின் ரன் அவுட்

அடிலெய்டில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கிடையில் பகலிரவு டெஸ்ட் போட்டி நேற்று துவங்கி நடைபெற்று வருகிறது. முதலில் பேட்டிங் செய்துவரும் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி முதல் நாள் ஆட்டத்தின்போது 74 ரன்களை அடித்திருந்த நிலையில் ரன் அவுட் ஆனார்.

விராட் கோலி அவுட்

விராட் கோலி அவுட்

அஜிங்க்யா ரஹானேவின் தவறான அழைப்பின் பேரின் சிங்கிள் ஓட முயன்ற விராட் கோலி ஹாசல்வுட்டின் த்ரோவால் ஆட்டமிழந்தார். இந்நிலையில் விராட் கோலியின் ரன் அவுட் மிகப்பெரிய ஏமாற்றத்தை அளித்துள்ளதாக முன்னாள் ஆஸ்திரேலிய ஸ்பின்னர் ஷேன் வார்ன் தெரிவித்துள்ளார்.

ஷேன் வார்ன் டிவீட்

ஷேன் வார்ன் டிவீட்

இதுகுறித்து அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் விராட் கோலி எப்போதும் அவுட் ஆகி வெளியேறும்போது பெரிய ஸ்கோருடன் திரும்ப வேண்டும் என்பதில் தீவிரமாக இருப்பார் என்றும், ஆனால் இந்த ரன் அவுட் கிரிக்கெட் காதலர்களுக்கு மிகப்பெரிய அவமானத்தை தந்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

ஆஸ்திரேலியா பேட்டிங்

ஆஸ்திரேலியா பேட்டிங்

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையில் பகலிரவு போட்டி உள்ளிட்ட 4 டெஸ்ட் போட்டித் தொடர் திட்டமிடப்பட்டுள்ள நிலையில், நேற்று பகலிரவு போட்டி துவங்கியுள்ளது. இதில் நேற்றைய தினம் 6 விக்கெட்டுகளை இழந்து 233 ரன்களை எடுத்திருந்த நிலையில், இன்றைய இரண்டாவது போட்டியில் மீதமுள்ள 4 விக்கெட்டுகளை இழந்து 244 ரன்களை இந்தியா எடுத்துள்ளது. ஆஸ்திரேலியா ஆடத்துவங்கியுள்ளது.

Story first published: Friday, December 18, 2020, 10:39 [IST]
Other articles published on Dec 18, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+