Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

தங்கப் பதக்கமே இல்லாமல் நடந்த ஒலிம்பிக் போட்டி.. பெண்களுக்கும் அனுமதி இல்லை..14 நாடுகள் பங்கேற்பு

ஏத்தன்ஸ் :விளையாட்டு உலகில் மிகவும் உயரிய தொடராக கருதப்படுவது கோடைக் கால ஒலிம்பிக் போட்டிகள் தான். இந்த ஒலிம்பிக் தொடர் முதல் முறையாக 1896 ஆம் ஆண்டு கிரேக்க நாட்டின் ஏத்தன்ஸ் நகரில் நடைபெற்றது.

முதல் முறையாக நடைபெற்ற இந்த தொடரில் 14 நாடுகள் தான் பங்கேற்றதாக வரலாறு இருக்கின்றது. அது மட்டுமல்லாமல் 241 போட்டியாளர்கள் தான் இந்த தொடரில் பங்கேற்றனர். இதில் அத்தனையும் ஆண்கள் தான் என்று சொன்னால் உங்களால் நம்ப முடிகிறதா?

aris Olympic 2024 2024

அது மட்டுமில்லாமல் ஒலிம்பிக் போட்டியில் வெற்றி பெற்றால் அவர்களுக்கு தங்கப்பதக்கம் வழங்கப்படுவது தான் மரபு. ஆனால் முதன் முறையாக நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் முதலிடத்தை பிடித்தவர்களுக்கு வெள்ளியும் இரண்டாவது இடத்தை பிடித்தவர்களுக்கு செம்பும் (copper) மூன்றாவது இடத்தைப் பிடித்தவர்களுக்கு வெண்கலமும் வழங்கப்பட்டிருந்தது.

ஆனால் அதன் பிறகு வெள்ளிக்கு பதிலாக தங்கமும் செம்புக்கு பதிலாக வெள்ளியும் மாற்றப்பட்டது. இந்த 14 நாடுகளில் பெரிய அளவிலான போட்டியாளர்கள் அமெரிக்காவிலிருந்து பங்கேற்றர்கள். மற்ற போட்டியாளர்கள் ஐரோப்பிய நாடுகளை சேர்ந்தவர்கள். இந்த தொடரில் தடகளப் போட்டிகள், சைக்கிள் போட்டிகள், கத்திச்சண்டை, ஜிம்னாஸ்டிக், துப்பாக்கிச் சூடும் போட்டிகள், நீச்சல் போட்டிகள் டென்னிஸ் பல் தூக்குதல் மல்யுத்தம் ஆகிய பிரிவுகளில் போட்டிகள் நடைபெற்றன.

இதில் அமெரிக்கா 11 தங்கம், ஏழு வெள்ளி இரண்டு வெண்கலம் என 20 பதக்கங்களுடன் முதல் இடத்திலும், கிரீஸ் 10 தங்கம் ,18 வெள்ளி, 19 வெண்கலத்துடன் 47 பதக்கங்களுடன் இரண்டாவது இடத்திலும், ஜெர்மனி ஆறு தங்கம், 5 வெள்ளி, 2 வெண்கலம் என 13 பதக்கங்களுடன் மூன்றாவது இடத்திலும் இருந்தது.இந்தத் தொடரில் கலப்பு அணி என்று ஒரு புதிய முறை நடைமுறைப்படுத்த இருந்தது.

அதாவது பல்வேறு நாடுகளை சேர்ந்த வீரர் வீராங்கனைகள் இதில் ஒரே அணியாக பங்கேற்று போட்டியில் விளையாடினார்கள். அப்போது ஆண்களுக்கு மட்டுமே மிகவும் முக்கியத்துவம் அளிக்கப்பட்ட நிலையில் பெண்கள் இது போன்ற விளையாட்டு போட்டிகளில் பங்கேற்க அனுமதிக்கப்படவில்லை. கிரேக்க நாட்டில் அதன் பிறகு 2004 ஆம் ஆண்டு தான் ஒலிம்பிக் போட்டிகள் நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Sunday, July 21, 2024, 14:16 [IST]
Other articles published on Jul 21, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+