ஒலிம்பிக் -தனிநபர் பிரிவில் இந்தியாவின் முதல் தங்கம்.. அபினவ் பிந்தராவின் கதை என்ன?கற்ற பாடம் என்ன
மும்பை : 100 கோடி மக்கள் மேல் வசித்து வரும் இந்திய நாட்டு ஒலிம்பிக் விளையாட்டில் ஒரு தங்கப்பதக்கம் வெல்ல கடுமையாக தடுமாறி வந்தோம். அந்நியன் திரைப்படத்தில் எழுத்தாளர் சுஜாதா ஒரு வசனம் எழுதி இருப்பார்.
அதில் மற்ற நாடுகள் எல்லாம் ஒலிம்பிக் பதக்க பட்டியலில் எந்த இடம் பிடிக்க போகிறோம் என்று எதிர்பார்த்து இருக்கும் நிலையில் 100 கோடி பேர் வசிக்கும் இந்தியாவில் மட்டும் பதக்க பட்டியலில் இடம் பிடிப்போமா ஒரு பதக்கம் ஆவது வாங்கி விடுவோமா என்று மக்கள் எதிர்பார்க்கின்றனர் என்று எழுதி இருப்பார்.

ஹாக்கியில் இந்திய அணி ஒரு காலகட்டத்தில் தொடர்ந்து தங்கப்பதக்கத்தை வாங்கி வந்தாலும், தனிநபர் பிரிவில் 2008 ஆம் ஆண்டு பீஜிங் ஒலிம்பிக் போட்டியில் தான் இந்தியா முதல் தங்கப் பதக்கத்தை தட்டிச் சென்றது. இந்தியாவின் இந்த கனவை நினைவாக்கியவர் அபினவ் பிந்த்ரா.
10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் அபினவ் பிந்த்ரா தங்கப்பதக்கம் வென்று இந்திய ஒலிம்பிக் வரலாற்று சரித்திரத்தில் மிகவும் முக்கிய நபராக மாறினார். அபிநவ் பிந்திராவின் வெற்றி இந்தியாவுக்கு ஒரு மிகப்பெரிய பாடத்தை கற்றுக் கொடுத்தது. அதன் பிறகு தான் நாம் என்ன தவறு செய்தும் அதனை எப்படி சரி செய்ய வேண்டும் என்பதை அரசாங்கத்திற்கு புரிந்தது.
உதாரணத்திற்கு அபினவ் பிந்த்ரா ஒன்றும் ஏழை எளிய குடும்பத்தைச் சேர்ந்தவர் கிடையாது. அவருடைய தாய், தந்தை மிகப்பெரிய தொழிலதிபராக இருந்திருக்கிறார்கள். மகனுக்கு ஆர்வமும் திறமையும் இருக்கிறது என்பதை தெரிந்து கொண்ட அபினவ் பிந்த்ராவின் குடும்பத்தினர், அவருக்கு சர்வதேச அளவிலான பயிற்சியை சிறுவயதிலிருந்தே கொடுக்கத் தொடங்கினார்.
அபிநவ் பின்ராவின் ஆசையை நிறைவேற்ற தங்களால் முடிந்ததை தங்கள் சொந்த செலவில் செய்தார்கள். இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அபிநவ் பிந்திரா, எனக்கு திறமை மட்டுமல்ல வாய்ப்பு வசதியும் கிடைத்தது. இதனால் தான் என்னால் தங்கம் வெல்ல முடிந்தது நமது நாட்டில் பலருக்கு திறமை இருந்தாலும்,வசதி வாய்ப்புகள் இல்லாமல் இருக்கிறது.
அவர்களை எல்லாம் கண்டுபிடித்து நான் பெற்ற பயிற்சியை அவர்களும் பெற்றிருந்தால் நாம் எப்போதும் தங்கம் வாங்கி இருக்கலாம் என்று கூறியிருந்தார். இதன் பிறகு தான் மத்திய அரசு வீரர்களுக்கு உலக தரம் வாய்ந்த பயிற்சி வழங்க வேண்டும் என்ற முடிவு எடுத்து வெளிநாட்டு பயிற்றுள்ளர்களை இந்தியாவிற்கு வர வைத்தது குறிப்பிடத்தக்கது. எதிர்காலத்தில் இந்தியா ஒலிம்பிக்கில் பல பதக்கங்களை வாங்கி குவிக்கலாம். அதற்கு எல்லாம் முக்கிய தொடக்கப் புள்ளியாக இருந்தவர் அபிநவ் பிந்திரா தான்.


Click it and Unblock the Notifications