Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

SRH vs RCB:பெங்களூர் பந்துவீச்சை அடித்து துவைத்த பெய்ர்ஸ்டோ.. ஐபிஎல் தொடரில் சதம் அடித்து சாதனை

Recommended Video

IPL 2019:Hyderabad vs Bengaluru | ஹைதராபாத் அபார பேட்டிங், பெங்களூருக்கு அடுத்த தோல்வி

ஹைதராபாத்:பெங்களூருக்கு எதிரான ஆட்டத்தில் சன் ரைசர்ஸ் அணியின் தொடக்க வீரர் பெய்ர்ஸ்டோ 114 ரன்கள் குவித்து சாதனை படைத்தார்.

ஐபிஎல் தொடர் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் மிக பிரமாண்டமாக நடத்தப்பட்டு வருகிறது. மொத்தம் 56 போட்டிகள் நடத்தப்படுகின்றன. இந் நிலையில் ராயல்ஸ் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும், சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் மோதுகின்றன.

டாஸ் வென்ற பெங்களூர் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. ஹைதராபாத் அணி சார்பில் துவக்க வீரர்களாக வார்னரும், பெய்ர்ஸ்டோ களம் இறங்கினர். இருவரும் அருமையான தொடக்கம் கொடுத்தனர்.

அற்புத ஆட்டம்

அற்புத ஆட்டம்

தொடக்கம் முதலே ஒரு முடிவோடு அவர்கள் ஆட தொடங்கினர். ஆட்டத்தின் முதல் ஓவர் மட்டுமல்லாமல்.. அடுத்து வரக்கூடிய ஓவர்களிலும் இருவரும் அற்புதமான ஆட்டத்தை ஆடினர்.

ரன்ரேட் அதிகரிப்பு

ரன்ரேட் அதிகரிப்பு

2வது ஓவரில் 21 ரன்கள், 3வது ஓவரில் 32 ரன்கள் என தொடர்ந்து ரன்கள் வந்து கொண்டே இருந்தன. இந்த ஜோடியை நிலைக்க விடக்கூடாது என்று முடிவு எடுத்திருந்த கோலி.. பந்துவீச்சாளர்களை மாற்றி மாற்றி பார்த்தார்.

பறந்து பந்துகள்

பறந்து பந்துகள்

ஆட்கள் மாறினார்களே தவிர... ஆட்டம் மாறவில்லை. முன்பை விட வார்னரும். பெய்ர்ஸ்டோவும் சுறுசுறுப்பாக ஆட ஆரம்பித்தனர். அதிரடியாக ஆடிய வார்னர் முதலில் 50 ரன்களை எட்டுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால்... 9வது ஓவரில் தமது அரை சதத்தை எட்டினார் பெய்ர்ஸ்டோ.

பார்ட்னர்ஷிப்

பார்ட்னர்ஷிப்

மிக எளிதாக இருவரும் பார்ட்னர்ஷிப்பில் 100 ரன்களை கடந்தனர். அதன் பின்னரும் இருவரும் தமது ரன் வேட்கையை நிறுத்தவில்லை. பெங்களூர் அணியின் பந்துவீச்சை சிதறடித்தனர்.

பெய்ர்ஸ்டோவ் சதம்

பெய்ர்ஸ்டோவ் சதம்

தொடக்கம் முதலே அதிரடியாக ஆடிய பெய்ர்ஸ்டோ ஐபிஎல் தொடரில் தமது முதல் சதத்தை எடுத்து புதிய சாதனை படைத்தார். 17வது ஓவரின் போது 114 ரன்கள் எடுத்திருந்த பெய்ர்ஸ்டோ சாஹல் பந்தில் ஆட்டமிழந்தார்.

Story first published: Sunday, March 31, 2019, 17:33 [IST]
Other articles published on Mar 31, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+