For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

SRH VS RR:மரண காட்டு காட்டிய வார்னர்.. பதிலுக்கு பதில் தந்த சன் ரைசர்ஸ்

ஹைதராபாத்:ராஜஸ்தான் அணியில் சாம்சன் சன் ரைசர்ஸ் அணியின் பந்துவீச்சை சல்லடையாக்க, அதற்கு வார்னர் தமது பேட்டிங்கில் திருப்பி அடித்து கலக்கி உள்ளார்.

ஹைதராபாதில் சன் ரைசர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் அணி முதலில் விளையாடியது. ரகானே, சாம்சன் ஜோடி அந்த அணிக்கு அருமையாக அடித்தளம் அமைத்து கொடுத்தது.

இருவரும் சன் ரைசர்ஸ் பந்துவீச்சு சொல்லி வைத்தது போல பின்னி எடுத்தனர். 70 ரன்களில் ரகானே வெளியேறினாலும், ஸ்டைலிஸ் சாம்சன் விடுவதாக இல்லை. சன் ரைசர்ஸ் பந்துவீச்சை பிரித்து மேய்ந்துவிட்டார்.

பதம் பார்த்த வார்னர்

பதம் பார்த்த வார்னர்

பவுண்டரிகள், சிக்சர்கள் என பந்துகளை அவரது மட்டை பதம் பார்க்க தொடங்கியது. பவுலிங்கை புரட்டி எடுத்த சாம்சன் சதம் அடித்து அசத்தினார். இந்த தொடரில் சதம்அடிக்கும் முதல் வீரர் என்ற பெயரும் அவருக்கு கிடைத்தது. அணியும் 198 ரன்களை குவித்தது.

199 ரன்கள் வெற்றி இலக்கு

199 ரன்கள் வெற்றி இலக்கு

199 என்ற இமாலய இலக்கை எப்படி எட்டுவது என்ற யோசனையுடன் களம் இறங்கினர் சன் ரைசர்சின் வார்னரும், பெர்ஸ்டோவும். முதல் ஓவரில் முதல் பந்தை பவுண்டரிக்கு விரட்டி அடித்து ரன் கணக்கை துவக்கினார் வார்னர்.

அதன்பின்னர் சரவெடிதான். பந்துகள் எல்லைக்கு அப்பால் தான் அதிக முறை இருந்தன. ரன்கள் பவுண்டரிகள், சிக்சர்களாக வந்து சேர்ந்தன.

ரன்கள் உயர்ந்தன

ரன்கள் உயர்ந்தன

வார்னரின் அதிரடியை கட்டுப்படுத்த முடியாமல் ராஜஸ்தான் பந்து வீச்சாளர்கள் திணறினர். ரன்கள் மளமளவென உயர்ந்தன. தொடக்க வீரர்களான இருவரும் முதல் விக்கெட்டுக்கு 110 ரன்கள் குவித்தனர்.

வார்னர் ஆட்டமிழப்பு

வார்னர் ஆட்டமிழப்பு

அபாரமாக ஆடிய வார்னர் 69 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அவர் 9 பவுண்டரிகளும், 2 சிக்சர்களையும் அடித்தார். அவரது விக்கெட்டை கைப்பற்றிய பின்னரே ராஜஸ்தான் அணிக்கு நம்பிக்கை பிறந்தது. மேலும் 7 ரன்கள் சேர்ப்பதற்குள் பெர்ஸ்டோவும் ஆட்டமிழக்க.. ஆட்டத்தை கைக்குள் கொண்டு வந்தது சன் ரைசர்ஸ்.

Story first published: Friday, March 29, 2019, 23:36 [IST]
Other articles published on Mar 29, 2019
English summary
David warner blasted rajasthan royals bowling.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+