CSK vs SRH: பெயர்ஸ்டோவ் டக் அவுட்.. ஆனாலும் விளாசிய வார்னர், மணிஷ் பாண்டே.. இருவரும் அரைசதம்
சென்னை:சென்னைக்கு எதிரான போட்டியில் ஹர்பஜன் பந்தில் தொடக்க விக்கெட்டை இழந்தாலும், சன் ரைசர்ஸ் அணியின் டேவிட் வார்னர், மணிஷ் பாண்டே அரைசதம் எடுத்து அசத்தினர்.
ஐபிஎல் தொடரின் 41வது போட்டி இன்று இரவு 8 மணிக்கு சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் துவங்கியது. இந்த போட்டியில் தோனி தலைமையிலான சென்னை அணியும், வில்லியம்சன் தலைமையிலான சன் ரைசர்ஸ் அணியும் களம் காண்கின்றன.
போட்டியுடன் சன் ரைசர்ஸ் அணிவீரர்களான பேர்ஸ்டோ மற்றும் வார்னர் ஆகியோர் உலகக்கோப்பை தொடருக்கான பயிற்சி போட்டியில் விளையாட தாயகம் திரும்புகின்றனர். எனவே இந்த போட்டியை வெற்றியுடன் முடிக்க சன் ரைசர்ஸ் அணி திட்டமிட்டுள்ளது.

பிளே ஆப் உறுதியாகுமா?
2 போட்டிகளிலும் தோல்வி கண்ட சென்னை அணி, பிளே ஆப் வாய்ப்பை உறுதி செய்யும் நோக்கோடு விளையாடுகிறது. போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன் தோனி முதலில் பந்துவீச்சினை தேர்வு செய்தது.

டக் அவுட்
அதன்படி முதலில் ஹைதராபாத் அணியில் துவக்க வீரர்களாக வார்னரும், பெயர்ஸ்டோவும் களம் இறங்கினர். யாரும் எதிர்பாராத வகையில் 2வது ஓவரிலேயே பெயர்ஸ்டோவ், தமிழ் புலவர் ஹர்பஜன் பந்தில் டக் அவுட்டானார்.

அதிரடி ஆட்டம்
2வது விக்கெட்டுக்கு வார்னருடன் கை கோர்த்தவர் மணிஷ் பாண்டே. இருவரும் நிதானமாக, அதே நேரத்தில் அதிரடியாக ஆடினர். ஓவர் ஒன்றுக்கு 10 ரன்கள் வீதம் இருவரும் அடிக்க தொடங்கினர். இருவரும் அதிரடியால் ரன்கள் வந்து விழுந்தன.

அரைசதம் அடித்து அபாரம்
சிறப்பாக ஆடிய மணிஷ் பாண்டே முதலில் அரைசதம் கடந்து அசத்தினார். அடுத்த சில நிமிடங்களில் வார்னரும் அரைசதம் கடந்தார். இதே வேகத்தில் ஹைதராபாத் அணி பயணித்தால் ஸ்கோர் 200 ரன்களை எளிதாக கடக்கும் என்று கூறலாம்.


Click it and Unblock the Notifications