For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

வார்னர் அதிரடி, பாண்டே அட்டகாசம்… சொதப்பிய விஜய் சங்கர்..! சென்னைக்கு வெற்றி இலக்கு 176 ரன்கள்

சென்னை:சென்னைக்கு எதிரான போட்டியில் டேவிட் வார்னர், மணிஷ் பாண்டே அரைசதம் எடுத்து அசத்தினாலும் இறுதி ஓவர்களில் திணறி, 175 ரன்களை குவித்தது சன் ரைசர்ஸ் அணி.

ஐபிஎல் தொடரின் 41வது போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் துவங்கியது. போட்டியில் தோனி தலைமையிலான சென்னை அணியும், வில்லியம்சன் தலைமையிலான சன் ரைசர்ஸ் அணியும் மோதின.

1
45917

இந்த போட்டியுடன் சன் ரைசர்ஸ் வீரர்களான பெயர்ஸ்டோ மற்றும் வார்னர் ஆகியோர் உலக கோப்பை தொடருக்கான பயிற்சி போட்டியில் விளையாட தாயகம் திரும்புகின்றனர். எனவே இந்த போட்டியை வெற்றியுடன் முடிக்க சன் ரைசர்ஸ் அணி திட்டமிட்டுள்ளது.

சென்னை பந்துவீச்சு

சென்னை பந்துவீச்சு

போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன் தோனி முதலில் பந்துவீச்சினை தேர்வு செய்தது. இதையடுத்து, ஹைதராபாத் அணி துவக்க வீரர்களாக வார்னரும், பெயர்ஸ்டோவும் களம் இறங்கினர்.

பெயர்ஸ்டோவ் அவுட்

பெயர்ஸ்டோவ் அவுட்

சிறப்பாக ஆடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட பெயர்ஸ்டோவ், 2வது ஓவரிலேயே பெயர் ஸ்டோவ், தமிழ் புலவர் ஹர்பஜன் பந்தில் டக் அவுட்டானார். அதன்பின்னர் 2வது விக்கெட்டுக்கு வார்னருடன் கை கோர்த்தவர் மணிஷ் பாண்டே.

பாண்டே சதம்

பாண்டே சதம்

சொல்லி வைத்தால் போல இருவரும் நிதானமாக, அதே நேரத்தில் அதிரடியாக ஆடினர். ஓவர் ஒன்றுக்கு 10 ரன்கள் வீதம் இருவரும் அடிக்க தொடங்கினர். சிறப்பாக ஆடிய மணிஷ் பாண்டே முதலில் அரைசதம் கடந்து அசத்தினார்.

வார்னர் 57 ரன்கள்

வார்னர் 57 ரன்கள்

அடுத்த சில நிமிடங்களில் வார்னரும் அரைசதம் கடந்தார். ஸ்கோர்120 ரன்களை எட்டிய போது சிறப்பாக ஆடிய வார்னர் 57ரன்களில் அவுட்டானார். அவரை வீழ்த்தியது தமிழ் புலவர் ஹர்பஜன் சிங்.

விஜய் சங்கர் சொதப்பல்

விஜய் சங்கர் சொதப்பல்

அதன் பின்னர் களத்துக்கு வந்தவர் விஜய் சங்கர். ஏதோ மாயாஜாலம் செய்வார் என்று அனைவரும் எதிர்பார்த்த வேளையில் அவர் காட்டிய மேஜிக்கோ வேறு. ரன்களை எடுக்க திணறியதோடு... ரன் ரேட்டையும் குறைக்க காரணமானார்.

26 ரன்களில் அவுட்

26 ரன்களில் அவுட்

ஜெட் வேகத்தில் உயர்ந்த ரன்ரேட்... ஒரு கட்டத்தில் நகராமல் அடம்பிடித்தது. 20 பந்துகளை எதிர்கொண்ட அவர் ஒரு வழியாக, 26 ரன்கள் அடித்து ஆட்டம் இழந்தார்.

ரன் குவித்த பாண்டே

ரன் குவித்த பாண்டே

விஜய் சங்கர் எதிர்கொண்ட பந்துகளை, மணிஷ் பாண்டேவுக்கு வழங்கி இருந்தால் பாவம்... அவர் சதத்தையாவது எட்டியிருப்பார். ஆனாலும் கிடைக்கின்ற பந்துகளை விரட்டி ரன்களை குவித்தார் பாண்டே.

20 ஓவர்களில் 175 ரன்கள்

20 ஓவர்களில் 175 ரன்கள்

அணியின் ஸ்கோர் 167ஐ எட்டிய போது விஜய் சங்கர் 19வது ஓவரில் 26 ரன்களுடன் வெளியேறினார். 20வது ஓவரில் உள்ளே வந்த யூசுப் பதான் வெறும் 6 ரன்கள் மட்டும் எடுத்தார். மற்றொரு புறம் மணிஷ் பாண்டே 83 ரன்கள் குவித்து இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

176 ரன்கள் வெற்றி இலக்கு

176 ரன்கள் வெற்றி இலக்கு

மொத்தத்தில் 20 ஓவர்கள் முடிவில் ஹைதராபாத் அணி 175 ரன்களை எடுத்தது. சென்னை அணிக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள 176 ரன்களை அந்த அணி எளிதாக எடுக்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.

Story first published: Tuesday, April 23, 2019, 22:17 [IST]
Other articles published on Apr 23, 2019
English summary
Sun risers Hyderabad scored 175 runs against chennai super kings.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+