தோசையை கொன்ற தூஸ்ரா முரளிதரன்… இணையத்தை கலக்கிய அந்த புகைப்படம்
ஹைதராபாத்:இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் முரளிதரன் தோசையை ஆக்ரோசத்துடன் கடிக்கும் புகைப்படம் வைரலாகி வருகிறது.
ஐபிஎல் போட்டியில் ஹைதராபாத் அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக இருப்பவர் முத்தையா முரளிதரன். அமைதியான முறையில் ஒரு அசத்தல் ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்ற அணியென்றால் அது ஹைதராபாத் அணிதான்.

அதற்கு மிக முக்கியமான காரணமாக இருப்பது, அந்த அணியின் பயிற்சியாளர்களான டாம் மூடி, லட்சுமண் மற்றும் முத்தையா முரளிதரன் ஆகியோர் தான். முரளிதரன் டெஸ்ட் போட்டிகளில் 800 விக்கெட்டுகளை வீழ்த்தியவர்.
அதில் முரளிதரனின் செயல்பாடு என்பது எப்போதுமே தனி ரகம் தான். தனது அணியுடன் இணைந்து உணவு சாப்பிட்ட புகைப்படம் வெளியாகியுள்ளது. அதில் முரளிதரன் தோசையை ஆக்ரோஷத்துடன் கடிக்கும் புகைப்படம் உள்ளது.
அந்த அணியின் வீரர் ஸ்ரீவாஸ்தா கோஸ்தாமி தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அந்த பதிவில்... முரளி சார் தோசையை கொலை செய்கிறார் என்று நகைச்சுவையாக பதிவிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications