Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஆரம்பத்தில ஆமை... அப்புறமா அதிரடி.. பஞ்சாப்புக்கு 151 ரன்கள் வெற்றி இலக்கு நிர்ணயித்த சன் ரைசர்ஸ்

பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில், 151 ரன்களை வெற்றி இலக்காக சன் ரைசர்ஸ் அணி நிர்ணயித்துள்ளது. மந்தமான ஆட்டத்தை தொடங்கிய ஹைதராபாத், இறுதிகட்ட ஓவர்களில் ஓரளவு ரன்களை குவித்தது. 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 150 ரன்கள் எடுத்துள்ளது. தொடக்க வீரராக களம் கண்ட வார்னர், இறுதி வரை ஆட்டமிழக்காமல் 70 ரன்கள் குவித்தார்.

1
45898
பெயர்ஸ்டோவ் அவுட்

பெயர்ஸ்டோவ் அவுட்

பெயர்ஸ்டோவும் தடுமாறியது, அவர் பந்தை எதிர்கொண்ட விதத்திலேயே தெரிந்தது. 6 பந்துகளை மட்டுமே எதிர்கொண்ட அவர் 1 ரன் மட்டும் எடுத்து முஜிபுர் ரகுமான் பந்தில் வெளியேறினார்.

விஜய் சங்கர் அவுட்

விஜய் சங்கர் அவுட்

2வது விக்கெட்டுக்கு வார்னருடன் கைகோர்த்தார் நம்பிக்கை வீரர் விஜய் சங்கர். இருவரும் மெதுவாக ஆடத் தொடங்கினர். பந்துகளை பார்த்து, பார்த்து எதிர்கொண்ட விஜய் சங்கர் 26 ரன்னில் வெளியேறினார். அந்த ரன்களை எடுக்க அவர் எடுத்துக்கொண்ட பந்துகள் 27(மகா மோசம்).

அருமையான ரன் அவுட்

அருமையான ரன் அவுட்

அதன் பின்னர், 3வது விக்கெட்டுக்கு வார்னருடன் ஜோடி சேர்ந்தவர் முகமது நபி. இவரும் மெதுவாக தான் ஆடுவேன் என்று அடம்பிடித்தது அவரது ஆட்டத்திலேயே தெரிந்தது. அவர் எடுத்ததோ... 12 ரன்கள். அஸ்வின் பந்தில் அருமையாக ரன் அவுட் செய்யப்பட்டு வெளியேற்றப்பட்டார்.

வார்னரின் அரைசதம்

வார்னரின் அரைசதம்

பிறகு வந்த மணிஷ் பாண்டே ஓரளவு வார்னருக்கு கை கொடுத்தார். தொடக்கம் முதலே நிதானத்தை மட்டுமே பின்பற்றி வந்த வார்னர் ஒரு வழியாக அரைசதம் கடந்தார்.

அதிரடி ஆட்டம்

அதிரடி ஆட்டம்

16வது ஓவர்களில் இருந்து வார்னர் மட்டையை சுழற்ற ஆரம்பித்தார். அந்த ஓவரில் ஹைதராபாத் அணிக்கு 12 ரன்கள் கிடைத்தது. 17வது ஓவரிலும் வார்னர் மற்றும் பாண்டேவின் அதிரடி தொடர்ந்தது. அந்த ஓவரிலும் 12 ரன்கள் சேர்த்தனர்.

பாண்டே அவுட்

பாண்டே அவுட்

18வது ஓவரில் 6 ரன்கள் கிடைத்தன. 19வது ஓவரில் வார்னரின் ஒரு பவுண்டரி கணக்கில் வர ஸ்கோர் 3 விக்கெட் இழப்புக்கு 135 ரன்கள் என்று இருந்தது. 20வது ஓவரின் முதல் பந்தில் மணிஷ் பாண்டே கேட்சாகி வெளியேறினார்.

150 ரன்கள் எடுத்தது

150 ரன்கள் எடுத்தது

கடைசி ஓவரின் கடைசி 3 பந்தில் 2 பவுண்டரிகள், ஒரு சிக்சர் சில பவுண்டரிகள் கை கொடுத்தது. சன் ரைசர்ஸ் அணி 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 150 ரன்கள் எடுத்துள்ளது. தொடக்க வீரராக களம் கண்ட வார்னர், இறுதி வரை ஆட்டமிழக்காமல் 70 ரன்கள் குவித்தார்.

Story first published: Tuesday, April 9, 2019, 0:34 [IST]
Other articles published on Apr 9, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+