For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

SRH Vs RR:வார்னர் அதிரடி.. ரஷீத்கானின் 10 ரன்கள்.. 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்ற சன் ரைசர்ஸ்

Recommended Video

IPL 2019: Hyderabad vs Rajasthan | 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்ற ஹைதராபாத்-வீடியோ

ஹைதராபாத்: ராஜஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சன் ரைசர்ஸ் அணி வெற்றி பெற்றுள்ளது.

ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் ஹைதராபாத் போட்டியில், சன் ரைசர்ஸ், ராஜஸ்தான் அணிகள் மோதின. டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. சன் ரைசர்ஸ் அணி கேப்டன் கேன் வில்லியம்சன் காயத்தில் இருந்து குணமடைந்து களமிறங்கினார்.

பட்லர் ஏமாற்றினாலும், ரகானே சாம்சன் ஜோடி அருமையாக கலக்கியது. இருவரும் அபாரமாக ஆடினர். முதல் 50 ரன்களை 8வது ஓவரிலும், 100 ரன்களை 12வது ஓவரிலும் இருவரும் எட்டினர்.

இருவரும் அரைசதம்

இருவரும் அரைசதம்

2வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த ரகானே, சாம்சன் ஆகியோரை பிரிக்க முயன்றும் முடியவில்லை. இருவரும் அரை சதம் கடந்தனர். இருவரும் 2வது விக்கெட்டுக்கு 119 ரன்கள் சேர்த்து அபாரமாக ஆடினர். அணியின் ஸ்கோர் 134 ரன்களாக இருந்த போது ரகானே ஆட்டமிழந்தார். அவர் எடுத்தது 70 ரன்கள்.

சாம்சன் துவம்சம்

சாம்சன் துவம்சம்

அடுத்து ஸ்டோக்ஸ் வந்தாலும் மறுமுனையில் சாம்சன் அதிரடியாக மாறினார். சன் ரைசர்ஸ் பந்துவீச்சை அடித்து துவம்சம் செய்தார். இந்த ஐபிஎல் தொடரின் முதல் சதத்தை எட்டினார்.

199 ரன்கள் வெற்றி இலக்கு

199 ரன்கள் வெற்றி இலக்கு

ஹைதராபாத் பந்துவீச்சாளர் புவனேஷ்வர் குமார் வீசிய 18வது ஓவர் ரன்களாக மாறின. 1 சிக்சர், 4 பவுண்டரி என மொத்தமாக 24 ரன்கள் வந்து விழுந்தன. இதையடுத்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 20 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 198 ரன்கள் எடுத்தது. சாம்சன் (102), ஸ்டோக்ஸ் (16) அவுட்டாகாமல் இருந்தனர்.

கலக்கிய வார்னர்

கலக்கிய வார்னர்

199 ரன்கள் என்ற கடின இலக்குடன் சன் ரைசர்ஸ் அணி களம் இறங்கியது. தொடக்கமே அபாரம். பவுண்டரியுடன் தொடங்கி அதிரடி கிளப்பினார் வார்னர். 9 பவுண்டரிகள், 2 சிக்சர்கள் என 69 ரன்கள் குவித்தார்.

ரன்ரேட் உயர்வு

ரன்ரேட் உயர்வு

அவரின் இந்த தொடக்கம் தான் அணியின் ரன் ரேட்டை உயர்த்தியது. அவருக்கு இணையாக பெர்ஸ்டோவும் மட்டையை சுழற்றினார். அவரும் தமது பங்குக்கு 45 ரன்கள் எடுத்தார்.

விஜய் சங்கர்

விஜய் சங்கர்

இந்த ஜோடியை பிரித்த ராஜஸ்தான் அணிக்கு மகிழ்ச்சி நீடிக்கவில்லை. வில்லியம்சன் விக்கெட்டை வீழ்த்தினாலும் விஜய் சங்கர் கை கொடுத்தார். 15 பந்துகளில் அவர் அடித்த 35 ரன்கள் மிகவும் முக்கிய அம்சமாக இருந்தது.

12 ரன்கள் தேவை

12 ரன்கள் தேவை

அதில் அவர் 3 சிக்சர்களை அடித்திருந்தார். சன் ரைசர்ஸ் அணியில் அதிக சிக்சர்கள் அடித்தவரும் அவர்தான். கடைசி கட்டத்தில் 2 ஓவர்களில் 12 ரன்கள் தேவை என்றிருந்தது.

மீண்டும் டென்ஷன்

மீண்டும் டென்ஷன்

மைதானத்தில் டென்ஷன் பறந்தது. 19வது ஓவரை ஆர்ச்சர் வீசினார். முதல் 4 பந்துகளில் 3 ரன்கள் கிடைத்தன. 5வது பந்தை வீசினார் ஆர்ச்சர். அது வைடாக மாற... மீண்டும் டென்ஷன்.

சிக்சர், பவுண்டரி

சிக்சர், பவுண்டரி

மீண்டும் பந்தை வீசுகிறார் ஆர்ச்சர். அந்த பந்தை ரஷித் கான் பவுண்டரிக்கு அனுப்புகிறார். அப்பவே ஆட்டம் யார் பக்கம் என்று எல்லோருக்கும் தெரிந்துவிட்டது. அதன் பிறகு 6வது பந்தை அவர் சிக்சருக்கு அனுப்ப.. ஆட்டம் முடிந்தது.

5 விக். வித்தியாசத்தில் வெற்றி

5 விக். வித்தியாசத்தில் வெற்றி

ராஜஸ்தான் அணியை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது சன் ரைசர்ஸ். ரஷித் கான் அடித்த அந்த 10 ரன்கள் இறுதிக்கட்டத்தில் வெற்றிக்கு காரணமாக அமைந்தது.

Story first published: Saturday, March 30, 2019, 0:27 [IST]
Other articles published on Mar 30, 2019
English summary
Sun risers hydrabad win by 5 wickets against rajasthan royals.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+