Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

RR vs SRH:மனிஷ் பாண்டே விளாசிய 61... ராஜஸ்தானுக்கு 161 ரன்கள் இலக்கு நிர்ணயித்த சன் ரைசர்ஸ்

ஜெய்பூர்:ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் நிதானமாக ஆடிய ஹைதராபாத் அணி 160 ரன்கள் சேர்த்தது.

நடப்பு ஐபிஎல் சீசனின் 45 வது லீக் போட்டியில் ஸ்மித் தலைமையிலான ராஜஸ்தான் அணியும், கேன் வில்லியம்சன் தலைமையிலான ஹைதராபாத் அணியும் மோதியது. இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

1
45921

ஹைதராபாத் அணியில் தொடக்க வீரர்களாக வார்னர், கேப்டன் வில்லியம்சன் களமிறங்கினர். கேப்டன் வில்லியம்சன் 13 ரன்களிலும், வார்னர் 37 ரன்னிலும் அவுட்டாகினர்.

மனிஷ் பாண்டே

அதிரடியாக விளையாடிய மனிஷ் பாண்டே 36 பந்துகளில் 61 ரன்கள் குவித்தார். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் அவுட்டாகி ஹைதராபாத் ரசிகர்களுக்கு ஏமாற்றம் அளித்தனர்.

7 பேர் 6 ரன்கள்

7 பேர் 6 ரன்கள்

விஜய் சங்கர் 8 ரன்கள், ஷாகிப் அல் உசேன் 9 ரன்கள், ஹூடா ரன் ஏதுமின்றியும் வெளியேறினர். குறிப்பாக, கடைசி 7 வீரர்களில் 6 பேர் ஒற்றை இலக்கு ரன்னில் ஆட்டமிழந்துள்ளனர். மனிஷ் பாண்டேவின் கவுரமான ரன்கள் தான் அணியை ஓரளவு காப்பாற்றி இருக்கிறது.

161 ரன்கள் இலக்கு

161 ரன்கள் இலக்கு

ஹைதராபாத் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 160 ரன்கள் எடுத்தது. இதை தொடர்ந்து 161 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ராஜஸ்தான் அணி களமிறங்கியது.

 4 முறை

4 முறை

ராஜஸ்தான் அணியும், ஹைதராபாத் அணியும் இது வரை 10 போட்டிகளில் நேருக்கு நேர் மோதி உள்ளது. இதில் ஹைதராபாத் அணி 6 முறையும், ராஜஸ்தான் அணி 4 முறையும் வெற்றியடைந்துள்ளது.

ப்ளே ஆப் சுற்று

ப்ளே ஆப் சுற்று

இந்த போட்டியில் ராஜஸ்தான் அணி தோல்வியடைந்தால் ப்ளே ஆப் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை இழக்கும். எனவே, வெற்றியடைய வேண்டிய கட்டாயத்தில் அந்த அணி உள்ளது.

Story first published: Saturday, April 27, 2019, 22:19 [IST]
Other articles published on Apr 27, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+