For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

SRH vs RCB:என்னா அடி… பெய்ர்ஸ்டோவ், வார்னர் அதிரடி சதம்.. பெங்களூருக்கு 232 ரன்கள் வெற்றி இலக்கு

Recommended Video

IPL 2019:Hyderabad vs Bengaluru | ஹைதராபாத் அபார பேட்டிங், பெங்களூருக்கு அடுத்த தோல்வி

ஹைதராபாத்:பெங்களூருக்கு எதிரான ஆட்டத்தில் சன் ரைசர்ஸ் அணி 231 ரன்களை குவித்துள்ளது.

ஐபிஎல் தொடர் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் மிக பிரமாண்டமாக நடத்தப்பட்டு வருகிறது. மொத்தம் 56 போட்டிகள் நடத்தப்படுகின்றன. இந் நிலையில் ராயல்ஸ் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும், சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் மோதின.

டாஸ் வென்ற பெங்களூர் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. ஹைதராபாத் அணி சார்பில் துவக்க வீரர்களாக வார்னரும், பெய்ர்ஸ்டோ களம் இறங்கினர். இருவரும் அருமையான தொடக்கம் கொடுத்தனர்.

தொடக்கம்

தொடக்கம்

ஆட்டத்தின் முதல் ஓவரில் இருந்து அவர்கள் பந்துகளை விரட்ட ஆரம்பித்தனர்.

2வது ஓவர், 3வது ஓவர் என அனைத்து ஓவர்களிலும் ரன்கள் வந்து கொண்டே இருந்தன. இந்த ஜோடியை பிரிக்க பந்துவீச்சாளர்களை மாற்றி பார்த்தும் பலனில்லை.

அதிரடி ரன்குவிப்பு

அதிரடி ரன்குவிப்பு

அதிரடியாக ஆடிய பெய்ர்டோ 9வது ஓவரில் தமது அரை சதத்தை எட்டினார். அதன் பின்னரும் பந்துகளை பவுண்டரிகளுக்கும், சிக்சர்களுக்கும் அனுப்பினார். எளிதாக இருவரும் பார்ட்னர்ஷிப்பில் 100 ரன்களை எட்டினர். அதன் பின்னரும் இருவரும் பெங்களூர் அணியின் பந்துவீச்சை வெளுத்து வாங்கினர்.

பெய்ர்ஸ்டோவ் சதம்

பெய்ர்ஸ்டோவ் சதம்

தொடக்கம் முதலே அதிரடியாக ஆடிய பெய்ர்ஸ்டோ ஐபிஎல் தொடரில் தமது முதல் சதத்தை எடுத்து புதிய சாதனை படைத்தார். 17வது ஓவரின் போது 114 ரன்கள் எடுத்திருந்த பெய்ர்ஸ்டோ சாஹல் பந்தில் ஆட்டமிழந்தார். 185வது ரன்னில் தாம் சன் ரைசர்ஸ் அணி தமது முதல் விக்கெட்டை இழந்தது.

விஜய் சங்கர் அவுட்

விஜய் சங்கர் அவுட்

அதன்பின்னர் விஜய் சங்கர் களம் இறங்கினார். 9 ரன்கள் எடுத்திருந்த அவரும் ஆட்டமிழந்தார். ஆனால்.. ஒரு பக்கம் முன்பை விட ஆக்ரோஷமாக ஆடத் தொடங்கினார் வார்னர்.

சதமடித்த வார்னர்

சதமடித்த வார்னர்

பந்துளை நாலாபுறமும் சிதறடித்த அவர், தமது சதத்தை எட்டினார். ஒரு ஐபிஎல் தொடரில் தொடக்க வீரர்கள் இருவரும் சதம் அடிப்பது இதுவே முதல் முறையாகும்.

232 ரன்கள் இலக்கு

232 ரன்கள் இலக்கு

20 வது ஓவர்கள் முடிவில் சன் ரைசர்ஸ் அணி 2 விக்கெட் இழப்புக்கு 231 ரன்கள் எடுத்தது. அதன் மூலம் பெங்களூர் அணிக்கு 232 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது.

Story first published: Sunday, March 31, 2019, 18:14 [IST]
Other articles published on Mar 31, 2019
English summary
Sun risers hydrabad scored 231 runs against royal challengers of Bangalore.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+