Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

RR vs SRH : வில்லியம்சன் அவுட்… இருந்தாலும் நிதானமாக பேட் செய்யும் ஹைதராபாத்

ஜெய்பூர்: ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் எதிரான போட்டியில் ஹைதராபாத் தொடக்க விக்கெட்டை இழந்தாலும் நிதான ஆட்டத்தை எதிர்கொண்டு வருகிறது.

ஐபிஎல் தொடரின் 45வது போட்டியில் ஸ்டீவ் ஸ்மித் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், கேன் வில்லியம்சன் தலைமையிலான சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் மோதுகின்றன.

இந்த போட்டியில் ராஜஸ்தான் அணி தோல்வியடைந்தால் ப்ளே ஆப் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை இழக்கும். எனவே, வெற்றியடைய வேண்டிய கட்டாயத்தில் அந்த அணி உள்ளது.

ராஜஸ்தானின் ஜெய்ப்பூர் மைதானத்தில் தொடங்கிய போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. பெயர்ஸ்டோ நாடு திரும்பிவிட்டதால் அவருக்கு பதிலாக சஹா மீண்டும் அணியில் இடம்பிடித்துள்ளார்.

சேர்ப்பு

சேர்ப்பு

அதே போல் சித்தார்த் கவுல் ஆகியோரும் அணிக்கு திரும்பியுள்ளனர். யூசுப் பதான் மீண்டும் அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். அதே போல் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் ஸ்டோக்ஸ் மற்றும் ஆர்ச்சர் ஆகியோர் நாடு திரும்பி விட்டதால் அவர்களுக்கு பதிலாக ஆஸ்டன் டர்னர் மற்றும் லிவிங்ஸ்டன் ஆகியோர் அணியில் இடம்பெற்றுள்ளனர்.

தொடக்கம்

தொடக்கம்

இதையடுத்து, ஹைதராபாத் அணியில் தொடக்க வீரர்களாக வார்னரும், கேப்டன் வில்லியம்சனும் களம் இறங்கினர். அருமையான தொடக்கத்தை அளிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் 13 ரன்களில் வில்லியம்சன் வெளியேறினார்.

வில்லியம்சன் அவுட்

வில்லியம்சன் அவுட்

அதன்பிறகு வார்னருடன், மணிஷ் பாண்டே கை கோர்த்தார். இருவரும் நிதானமாக பந்துகளை எதிர்கொண்டனர். கிடைக்கின்ற சந்தர்ப்பத்தில் பந்துகளை பவுண்டரிக்கு அனுப்புகின்றனர்.

நிலையான ஆட்டம்

நிலையான ஆட்டம்

மிகப்பெரிய ஸ்கோரை எட்டினால் மட்டுமே ஹைதராபாத் அணி வெற்றி பெற முடியும். எனவே நிலைத்து நிற்க கூடிய வகையில் பார்ட்னஷிப் இந்த போட்டியில் அவசியம்.

Story first published: Saturday, April 27, 2019, 21:25 [IST]
Other articles published on Apr 27, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+