Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

SRH vs RCB:அடி தூள்..! பெய்ர்ஸ்டோ அரைசதம்.. 3வது முறையாக வார்னரும் அரைசதம்.. மண்டை காய்ந்த பெங்களூர்

Recommended Video

IPL 2019:Hyderabad vs Bengaluru | ஹைதராபாத் அபார பேட்டிங், பெங்களூருக்கு அடுத்த தோல்வி

ஹைதராபாத்:பெங்களூர் அணிக்கு எதிரான ஆட்டத்தில் தொடக்க வீரர்கள் வார்னரும், பெய்ர்ஸ்டோவும் அதிரடியாக ஆடி, அரைசதம் கடந்தனர்.

ஐபிஎல் தொடர் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் மிக பிரமாண்டமாக நடத்தப்பட்டு வருகிறது. மொத்தம் 56 போட்டிகள் நடத்தப்படுகின்றன. இந் நிலையில் ராயல்ஸ் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும், சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் மோதுகின்றன.

டாஸ் வென்ற பெங்களூர் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. ஹைதராபாத் அணி சார்பில் துவக்க வீரர்களாக வார்னரும், பெய்ர்ஸ்டோ களம் இறங்கினர். இருவரும் அருமையான தொடக்கம் கொடுத்தனர்.

அற்புத ஆட்டம்

அற்புத ஆட்டம்

தொடக்கம் முதலே ஒரு முடிவோடு அவர்கள் ஆட தொடங்கினர். ஆட்டத்தின் முதல் ஓவர் மட்டுமல்லாமல்.. அடுத்து வரக்கூடிய ஓவர்களிலும் இருவரும் அற்புதமான ஆட்டத்தை ஆடினர்.

ரன்ரேட் அதிகரிப்பு

ரன்ரேட் அதிகரிப்பு

2வது ஓவரில் 21 ரன்கள், 3வது ஓவரில் 32 ரன்கள் என தொடர்ந்து ரன்கள் வந்து கொண்டே இருந்தன. இந்த ஜோடியை நிலைக்க விடக்கூடாது என்று முடிவு எடுத்திருந்த கோலி.. பந்துவீச்சாளர்களை மாற்றி மாற்றி பார்த்தார்.

பறந்து பந்துகள்

பறந்து பந்துகள்

ஆட்கள் மாறினார்களே தவிர... ஆட்டம் மாறவில்லை. முன்பை விட வார்னரும். பெய்ர்ஸ்டோவும் சுறுசுறுப்பாக ஆட ஆரம்பித்தனர். கிடைக்கின்ற பந்துகளை பவுண்டரிக்கு அனுப்பி ரன்களை உயர்த்தினர்.

 பெய்ர்ஸ்டோ அரைசதம்

பெய்ர்ஸ்டோ அரைசதம்

அதிரடியாக ஆடிய வார்னர் முதலில் 50 ரன்களை எட்டுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால்... அதற்கு மாறாக, 9வது ஓவரில் தமது அரை சதத்தை எட்டினார் பெய்ர்ஸ்டோ. அதற்கு அவர் எடுத்துக் கொண்ட பந்துகள் 28.

பவுலர்கள் அதிர்ச்சி

பவுலர்கள் அதிர்ச்சி

ரன்கள் உயர்ந்து கொண்டே இருப்பதை கண்ட பெங்களூர் அணியை அதனை கட்டுப்படுத்த நினைத்தது. ஆனால்.. அதற்கு வழி ஏற்படுத்திக் கொடுக்காமல் ரன் வேட்டையை வார்னரும், பெய்ர்ஸ்டோவும் தொடர்ந்தனர்.

பார்ட்னர்ஷிப்

பார்ட்னர்ஷிப்

மிக எளிதாக இருவரும் பார்ட்னர்ஷிப்பில் 100 ரன்களை கடந்தனர். ஒரு ஓவருக்கு சராசரியாக 10 ரன்கள் என்ற விகிதத்தில் அவர்கள் ரன்களை சேர்த்தனர். பெய்ர்ஸ்டோவை தொடர்ந்து வார்னரும் அதிரடியாக அரைசதம் கடந்தார்.

Story first published: Sunday, March 31, 2019, 17:20 [IST]
Other articles published on Mar 31, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+