Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

"கே.எல்.ராகுல் தியாகம் செய்திருக்கிறார்”.. ஆஸி, தொடரில் சொதப்பியது ஏன்? கவாஸ்கர் சுவாரஸ்ய தகவல்

மும்பை: ஆஸ்திரேலிய அணியுடனான தொடரில் கே.எல்.ராகுல் தியாகம் செய்திருப்பதாக முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் கூறியுள்ளார்.

Recommended Video

KL Rahul தொடர்ந்து சொதப்பல் ஆட்டம் என்ன காரணம்? Sunil Gavaskar விளக்கம்

ஆஸ்திரேலிய அணியுடனான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது.

இந்த போட்டியில் வெற்றி பெற்ற போதும், இந்திய அணி வீரர்கள் சில குறைகளை விட்டு சென்றுள்ளனர்.

ராகுல் சொதப்பல்

ராகுல் சொதப்பல்

காயத்தில் இருந்து மீண்டு வந்த இந்திய அணியின் தொடக்க வீரர் கே.எல்.ராகுல், ஆசிய கோப்பை தொடர்ந்து ஆஸ்திரேலிய தொடரிலும் சொதப்பியுள்ளார். முதல் டி20ல் ஒரு அரைசதம் அடித்த போதும், மற்ற இரண்டு போட்டிகளிலும் சொற்ப ரன்களுக்கு வெளியேறினார். 3 போட்டிகளிலும் அவர் மொத்தமாக 66 ரன்களை மட்டுமே அடித்திருந்தார். இதனால் அவரின் ஃபார்ம் மீதான சந்தேகம் இன்னும் தீராமலேயே உள்ளது.

கவாஸ்கரின் விளக்கம்

கவாஸ்கரின் விளக்கம்

இந்நிலையில் ராகுல் தியாகம் செய்ததாலே தன் விக்கெட்டை பறிகொடுத்தார் என முன்னாள் வீரர் கவாஸ்கர் கூறியுள்ளார். இதுகுறித்து பேசியுள்ள அவர், " முதல் டி20 போட்டியில் சிறப்பாக விளையாடிய ராகுலுக்கு, அடுத்த 2 போட்டிகளிலும் இக்கட்டான சூழல் இருந்தது. அதாவது 2வது டி20 வெறும் 8 ஓவர்கள் போட்டி ஆகும். இதே போல 3வது டி20 போட்டியில் ஓவருக்கு சராசரியாக 9 ரன்கள் வீதம் தேவைப்படும் சூழல் இருந்தது.

அணிக்காக தியாகம்

அணிக்காக தியாகம்

முதல் பந்தில் இருந்தே அதிரடியாக விளையாட வேண்டும் என்ற சூழல் உருவானதால், ராகுலால் அவரின் இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்த முடியவில்லை. விராட் கோலி, ராகுல் போன்ற வீரர்களுக்கு தகுந்த நேரம் கொடுத்து விளையாட சொன்னால் நிறைய அரை சதங்களை எதிர்பார்க்கலாம். ஆனால் அணிக்காக அவர்கள் தியாகம் செய்ய வேண்டிய சூழல் உருவாகிறது என கவாஸ்கர் கூறியுள்ளார்.

அடுத்த தொடர்

அடுத்த தொடர்

இந்திய அணி அடுத்ததாக தென்னாப்பிரிக்க அணியுடன் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடவுள்ளது. டி20 உலகக்கோப்பை தொடருக்கு தயாராவதற்கான கடைசி தொடர் இதுதான் ஆகும். எனவே இந்த தொடரில் இந்திய வீரர்கள் அனைவரும் சிறப்பாக விளையாடியே தீர வேண்டும்.

Story first published: Tuesday, September 27, 2022, 12:20 [IST]
Other articles published on Sep 27, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+