Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

பும்ரா பவுலிங்கில் தப்பா..? அதை பேச எவனுக்கும் தகுதியே கிடையாது..! நேரலையில் பொங்கிய ஜாம்பவான்கள்!

மும்பை: பும்ராவை பத்தி தப்பா பேசும் அளவுக்கு இங்கே யாருக்கும் யோக்யதை கிடையாது என்று சுனில் கவாஸ்கர் உள்ளிட்ட முன்னாள் ஜாம்பவான்கள் காட்டமாக கூறியுள்ளனர்.

இந்திய அணியின் பவுலிங் துறையில், நட்சத்திரமாக இருப்பவர் இளம் நாயகன் ஜஸ்பிரித் பும்ரா. ஒருநாள் மற்றும் டெஸ்ட் அரங்கில் பல சாதனைகளை நிகழ்த்தி காட்டியவர்.

தொடக்க காலத்தில் அவரது பவுலிங்கை கேலி செய்தவர்கள் ஏராளம். ஒரு படி மேலே போய், அந்த பவுலிங் தரமானது இல்லை, பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும் என்றும் கூறினர். கிரிக்கெட் உலகில் இந்த விவகாரம் பெரிதாக பேசப்பட்டது.

ஹாட்ரிக் விக்.

ஹாட்ரிக் விக்.

துல்லியமான, வித்தியாசமான பவுலிங் ஆக்ஷன் தான் அவரது மிகப்பெரிய பலம். இதனால் தான், எதிரணி வீரர்களை திணறுகின்றனர். இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் 2வது டெஸ்டின் முதல் இன்னிங்ஸில் ஹாட்ரிக் விக்கெட் உட்பட மொத்தம் 6 விக்கெட்டுகளை வீழ்த்தி மிரட்டினார்.

பாராட்டு, குறை

பாராட்டு, குறை

அப்போது இயன் பிஷப்பும், கவாஸ்கரும் கமெண்ட்ரி செய்து கொண்டிருந்தனர். பும்ராவின் அபாரமான பவுலிங்கை பாராட்டிய இயன் பிஷப், பும்ராவின் பவுலிங் ஆக்ஷனை சிலர் குறை சொல்கிறார்கள். என்னால் அதை நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை. பும்ராவின் பவுலிங் ஆக்ஷன் வித்தியாசமானது.

கண்ணாடி முன்பு

கண்ணாடி முன்பு

கிரிக்கெட் விதிகளுக்குட்பட்டது தான் அவரது பவுலிங் ஆக்ஷன். உண்மையாகவே பும்ராவின் பவுலிங் ஆக்ஷனை சந்தேகிப்பவர்கள், கண்ணாடி முன் நின்று அவர்களை பார்க்க வேண்டும் என்றார் இயன் பிஷப்.

கவாஸ்கர் ஆவேசம்

கவாஸ்கர் ஆவேசம்

இதை கேட்ட கவாஸ்கர், ஆவேசப்பட்டார். உடனடியாக பதில் பேசினார். யார் அவர்கள்? பும்ராவின் பவுலிங் ஆக்ஷனை சந்தேகிப்பவர்களின் பெயர்களை சொல்லுங்கள் என்று கேட்டார். ஆனால் இயன் பிஷப் பதிலளிக்கவில்லை.

பவுலிங் சரிதான்

பவுலிங் சரிதான்

இதையடுத்து தொடர்ந்து கவாஸ்கர் பேசியதாவது: அவரது பவுலிங்கை நன்றாக பாருங்கள். கொஞ்ச தூரம் மட்டுமே ஓடி வருகிறார், பின்னர் கைகளை நேராக வைத்து பவுலிங் பண்ணுகிறார். இதில் எங்கே அவரது கை மடங்குகிறது? எங்கே தப்பு நடக்கிறது. அவரின் பந்துவீச்சு மிகவும் சரியே என்றார்.

Story first published: Monday, September 2, 2019, 17:57 [IST]
Other articles published on Sep 2, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+