For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

முகமது ஷமி ஒரு குதிரை.. இந்திய வேகப்பந்துவீச்சு டாப் கிளாஸ்.. கவாஸ்கர் பாராட்டு

பெங்களூரு : இலங்கை அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் இந்தியா வலுவான நிலையில் உள்ளது.

டாஸ் வென்று பேட் செய்த இந்திய அணி முதல் இன்னிங்சில் 252 ரன்கள் எடுத்தது. இலங்கை அணி 86 ரன்கள் சேர்ப்பதற்குள் 6 விக்கெட் இழந்தது.

இந்திய வேகப்பந்துவீச்சாளர் பும்ரா 3 விக்கெட்டையும், முகமது ஷமி 2 விக்கெட்டையும் வீழ்த்தினர்.

குதிரை மாதிரி

குதிரை மாதிரி

இலங்கை பேட்டிங் செய்யும் போது, பும்ரா 4 ஓவர்களாகவும், முகமது ஷமிதொடர்ந்து ஓவர்கள் வீசியும் கடும் நெருக்கடி அளித்தனர். இது தொடர்பாக பாராட்டியுள்ள இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கவாஸ்கர், முகமது ஷமி ஒரு குதிரை மாதிரி. குதிரை எப்படி வேலை செய்யுமோ அதே மாதிரி தான். ஒவ்வொரு பந்தையும் முழு வேகத்துடன் வீசுவார். எவ்வளவு நேரம் பந்துவீசினாலும், அவரது வேகம் குறையாது.

வேகம் குறையாது

வேகம் குறையாது

ஒரு சிலர் 4 ஓவர் மட்டும் தான் தொடர்ந்து வீச முடியும். அதன் பிறகு அவர்களுக்கு Tired ஆகி விடும். ஆனால் முகமது ஷமி முதல் ஓவர் வீசுவது போல் 6 அல்லது 7 ஓவர்களை தொடர்ந்து வீச முடியும். ஒவ்வொரு பந்து மூலம் பேட்ஸ்மேன்களுக்கு கடும் நெருக்கடியை முகமது ஷமி ஏற்படுத்தி வருகிறார்.

டாப் கிளாஸ்

டாப் கிளாஸ்

இது போன்ற தகுதிகள் உடைய பந்துவீச்சாளர்கள் உங்களுக்கு முக்கியம். ஆனால் ஒரு சிலர் வேகப்பந்துவீச்சாளர்கள் என்பதையே மறந்து விடுகின்றனர். இந்தியாவின் வேகப்பந்துவீச்சு டாப் கிளாசாக உள்ளது. முகமது ஷமி, பும்ரா ஆகியோர் புதிய பந்தை சிறப்பாக கையாளக் கூடியவர்கள்

நல்ல காலம்

நல்ல காலம்

3வது வேகப்பந்துவீச்சாளராக முகமது சிராஜ் உள்ளார். அவரும் சிறப்பாக பந்துவீசக்கூடியவர். இது தவிர உமேஷ் யாதவ் இருக்கிறார். இதனால் இந்தியாவுக்காக பல போட்டிகளில் விளையாடிய இஷாந்த் சர்மாவுக்கு கூட தற்போது வாய்பபு கிடைக்கவில்லை. இந்திய கிரிக்கெட்டுக்கு இது உண்மையிலேயே சிறந்த காலங்கள்.

Story first published: Sunday, March 13, 2022, 11:16 [IST]
Other articles published on Mar 13, 2022
English summary
Sunil Gavaskar appreciates Mohammed shami is a Work horse முகமது ஷமி ஒரு குதிரை.. இந்திய வேகப்பந்துவீச்சு டாப் கிளாஸ்.. கவாஸ்கர் பாராட்டு
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+