எங்குமே பலவீனம் இல்லை.... இந்திய அணிக்கு இப்படி ஒரு புகழ்ச்சியா.. கவாஸ்கர் சொன்ன அந்த வார்த்தைகள்!
மும்பை: இந்திய அணிக்கு பாராட்டுகளை அள்ளி வீசியுள்ளார் முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர்
ஐபிஎல் தொடர் பாதியில் நிறுப்பட்டுள்ள நிலையில், கிரிக்கெட் ரசிகர்களின் பார்வை உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியின் பக்கம் திரும்பியுள்ளது.
இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதும் இந்த போட்டி வரும் ஜூன் 18ம் தேதி முதல் இங்கிலாந்தின் சவுத்தாம்டனில் நடைபெறுகிறது.

இந்திய அணி
டெஸ்ட் போட்டிகளை பொறுத்தவரை இந்திய அணி கடந்த சில வருடங்களாக மிகவும் பலமான ஒன்றாக உள்ளது. பேட்டிங் மற்றும் பவுலிங் என வீரர்கள் ஃபுல் ஃபார்மில் உள்ளனர். கடைசியாக நடைபெற்ற ஆஸ்திரேலிய, இங்கிலாந்து தொடர்கள் மிகவும் முக்கியமானவைகள் ஆகும். தற்போது டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கும் நுழைந்துள்ளது.

இது தான் சிறந்த அணி
இந்நிலையில் இந்திய அணியின் சிறப்பான ஆட்டம் குறித்து கவாஸ்கர் புகழ்ந்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், ஒப்பீடு செய்வது மிகவும் கடினம், ஆனால் தற்போதுள்ள இந்திய அணி தான் இதுவரை நான் பார்த்திலேயே சிறந்தது என்று கூறுவேன். சாம்பியன் பேட்ஸ்மேன், சாம்பியன் பவுலர்கள், அற்புதமான ஸ்பின்னர்கள் உள்ளனர். இதில் தற்போது மிகச்சிறப்பான இளம் விக்கெட் கீப்பர் இணைந்துள்ளார். ரிஷப் பண்ட் சர்வதேச கிரிக்கெட்டில் மிகப்பெரும் வீரராக வலம் வருவார் எனக்கூறியுள்ளார்.

எங்கும் பலவீனம் இல்லை
1960களில் இருந்து இப்படி ஒரு இந்திய அணியை நான் பார்த்ததில்லை என நினைக்கிறேன். இதற்கு காரணம் அணியில் சரியான பேட்டிங் மற்றும் பவுலிங் வரிசை உள்ளது. எந்த ஒரு பகுதியும் பலவீனமாக இல்லை. டாப் ஆர்டர், மிடில், லோயர் ஆர்டர் என எங்கு வேண்டுமானாலும் பார்க்கலாம், பலவீனம் என்பதே இல்லை எனத்தெரிவித்துள்ளார்.

இளம் வீரர்கள்
தொடர்ச்சியாக டெஸ்ட் வெற்றிகளை குவித்து வரும் இந்திய அணி அடுத்ததாக வரவிருக்கும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியையும் வென்றுவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இங்கிலாந்து பிட்ச்-ல் அனுபவம் பெற்ற வீரர்கள் குறைவான அளவிலேயே இந்திய அணியில் உள்ளனர். ஆனால் இளம் வீரர்கள் பலரும் வியக்கவைக்கும் வகையில் செயல்படுவதால் ரசிகர்களுக்கு நம்பிக்கை வந்துள்ளது.


Click it and Unblock the Notifications