Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

“வெறும் 20 நிமிடங்கள் போதும்.. விராட் கோலியை மாற்றுவேன்”.. மோசமான ஃபார்ம்.. கவாஸ்கர் தடாலடி பேச்சு!

மும்பை: விராட் கோலியுடன் 20 நிமிடங்கள் பேச முடிந்தால் நிச்சயம் அவரை மாற்றி காட்டுவேன் என சுனில் கவாஸ்கர் சவால் விடுத்துள்ளார்.

இந்திய கிரிக்கெட்டில் தற்போது மிகவும் பரபரப்பாக பேசப்பட்டு வரும் விஷயம் விராட் கோலியின் பேட்டிங் ஃபார்ம் தான்.

கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக ஒரு சதம் கூட அடிக்காமல் உள்ள அவர், இங்கிலாந்து தொடரிலும் ஏமாற்றினார்.

கோலின் ஃபார்ம்

கோலின் ஃபார்ம்

டெஸ்ட் போட்டியில் 2 இன்னிங்ஸ்களிலும் சொற்ப ரன்களுக்கு வெளியேறிய அவர், டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட் தொடரிலும் மிகவும் மோசமாக அவுட்டானார். இதனையடுத்து விராட் கோலிக்கு வெஸ்ட் இண்டீஸ் உடனான தொடரில் ஓய்வு அறிவிக்கப்பட்டுள்ளது. அடுத்ததாக அவர் ஆசியக்கோப்பைக்கு தான் வருவார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கவாஸ்கரின் ஐடியா

கவாஸ்கரின் ஐடியா

இந்நிலையில் விராட் கோலியை தன்னால் சரி செய்ய முடியும் என முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் பேசியுள்ளார். அதில், கோலியுடன் எனக்கு 20 நிமிடங்கள் பேசுவதற்கு நேரம் கிடைத்தால் போதும், அவரின் தவறுகளை சரியாக எடுத்துக் கூறுவேன். அது அவருக்கு பெரும் உதவியாக இருக்கும். குறிப்பாக ஆஃப் ஸ்டம்ப் திசையில் அவரின் தவறுகள் குறித்து பேச வேண்டும்.

பிரச்சினை என்ன

பிரச்சினை என்ன

ஒவ்வொரு கிரிக்கெட் வீரருக்கும், அனைத்து பந்துகளையும் அடித்து ரன் எடுக்க வேண்டும் என ஆர்வம் இருக்கும். ஆனால் சரியான பந்துகளை தான் கணித்து விளையாட வேண்டும். அந்த வகையில் விராட் கோலி சரியான பந்துகளில் கூட விளையாடாமல், தடுப்பாட்டம் செய்து அவுட்டாகிறார். அது இங்கிலாந்து தொடரில் தெளிவாக தெரிந்தது.

 கவாஸ்கர் அனுபவம்

கவாஸ்கர் அனுபவம்

நான் ஒரு ஓப்பனிங் பேட்ஸ்மேனாக இருந்துள்ளேன். இதே ஆஃப் சைட் பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ளேன்.எனவே அவரிடம் நான் 20 நிமிடங்கள் பேசினால், அதில் இருந்து வெளியே வர உதவ முடியும். சிறந்த வீரர்கள் அனைவருமே தோல்விகளில் இருந்து மீண்டு வந்தவர்கள் தான். கோலி நிச்சயம் மீண்டு வருவார் என கவாஸ்கர் கூறியுள்ளார்.

Story first published: Tuesday, July 19, 2022, 12:42 [IST]
Other articles published on Jul 19, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+