Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

"இது என்னய்யா புது புரளியா இருக்கு?" - ரிஷப் பண்ட்டை கண்டித்த அம்பயர்கள் - பொங்கிய கவாஸ்கர்

லீட்ஸ்: இந்திய விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் கிரீசுக்கு வெளியே நின்று பேட்டிங் செய்ய கூடாது என்று நடுவர்கள் தெரிவித்த சம்பவம் பேசுபொருளாகி இருக்கிறது.

இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதும் 3வது டெஸ்ட் போட்டி லீட்ஸின் ஹெட்டிங்லே மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, முதல் இன்னிங்சில் இந்திய அணி 78 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

நடுவர்கள் ஆட்சேபனை

நடுவர்கள் ஆட்சேபனை

இப்போட்டியில் முதல் இன்னிங்ஸில், இந்திய விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் கிரீசுக்கு (crease) வெளியே நின்று பேட்டிங் செய்ய கூடாது என்று நடுவர்கள் ஆட்சேபனை தெரிவித்தது மிகவும் குழப்பமாக உள்ளது என்று இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார். கிரீசுக்கு வெளியே நின்று பேட்டிங் செய்தால் பேட்ஸ்மேனின் கால்தடங்கள் பட்டு ஆடுகளம் (pitch) சேதமடையும் என்று நடுவர்கள் கூறியுள்ளனர். ஆனால் இதற்கு கவாஸ்கர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். பேட்ஸ்மேன் ஆடுகளத்தின் எங்கிருந்து வேண்டுமானாலும் பேட்டிங் செய்யலாம், அது அவரது முடிவு. ஆனால் நடுவர்கள் ரிஷப் பண்ட்டை கிரீசுக்கு வெளியே நிற்க வேண்டாம் என்று சொன்னது ஆச்சரியமாக உள்ளது. பேட்ஸ்மேன்கள் ஸ்பின்னர்களை இறங்கிவந்து அடிக்கும்போது பிட்ச் சேதமடையாதா? இவ்வாறு சொல்வதுபுதிதாக உள்ளது என்று தெரிவித்துள்ளார்.

கருத்து சொல்ல விரும்பவில்லை

கருத்து சொல்ல விரும்பவில்லை

இந்திய அணியின் மற்றொரு முன்னாள் வீரரான சஞ்சய் மஞ்ச்ரேக்கர் நடுவர்களின் இந்த கருத்து ஒரு அபத்தமான முடிவு என்று தெரிவித்துள்ளார். ஆனால், இதற்கு பதில் அளித்துள்ள ரிஷப் பண்ட், நான் கிரீசுக்கு வெளியே நின்று பேட்டிங் செய்தபோது என்னுடைய கால்களில் ஒன்று, ஆடுகளத்தில் முக்கியமான பகுதியில் இருப்பதாக நடுவர்கள் கூறினர். இதனால், என்னை கிரீஸ்க்கு உள்ளே நின்று பேட்டிங் செய்ய என்று சொன்னார்கள். ஒரு பேட்ஸ்மேனாக நான் இதற்கு எந்த கருத்தும் தெரிவிக்க விரும்பவில்லை. ஏனெனில் எந்த பேட்ஸ்மேன் வெளியேறினாலும் நடுவர்கள் அப்படித்தான் கூறப் போகிறார்கள், எனவே நான் அதை கண்டுகொள்ளவில்லை. அதன்பின் நான் கிரீஸ்க்கு உள்ளே நின்று தான் விளையாடினேன் என்றார். முதல் இன்னிங்ஸில் 9 பந்துகளை சந்தித்த பண்ட் 2 ரன்களில் ராபின்சன் ஓவரில் கேட்ச் ஆனார்.

ரன்கள் குவித்த இங்கிலாந்து

ரன்கள் குவித்த இங்கிலாந்து

முன்னதாக, முதல் இன்னிங்சில் இந்திய அணி சார்பாக அதிகபட்சமாக ரோஹித் ஷர்மா 105 பந்துகளை சந்தித்து 19 ரன்களையும், ரஹானே 54 பந்துகளை சந்தித்து 18 ரன்களையும் எடுத்தனர். மற்ற வீரர்கள் அனைவரும் சிங்கிள் டிஜிட்டில் வெளியேறினார்கள். லோகேஷ் ராகுல் 0, புஜாரா 1, கேப்டன் கோலி 7, பண்ட் 2, ஜடேஜா 4 என்று வெளியேறினார்கள். இங்கிலாந்து தரப்பில் ஜேம்ஸ் ஆண்டர்சன், க்ரெய்க் ஓவர்டன் தலா 3 விக்கெட்டுகளையும், ஓலே ராபின்சன், சாம் கர்ரன் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். பிறகு, களமிறங்கிய இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 432 ரன்கள் குவித்தது.

தப்பிக்குமா இந்தியா?

தப்பிக்குமா இந்தியா?

இங்கிலாந்து தொடக்க வீரர் ரோரி பர்ன்ஸ் 61 ரன்களும், ஹஸீப் ஹமீத் 68 ரன்களும், டேவிட் மலன் 70 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். கேப்டன் ஜோ ரூட் வழக்கம் போல, இந்திய பவுலர்களை சிறப்பாக எதிர்கொண்டு 121 ரன்கள் விளாசி ஆட்டமிழந்தார். எனினும், இந்திய அணி 2வது இன்னிங்ஸில் எதிர்பார்த்ததை விட மிக சிறப்பாக விளையாடி வருகிறது. லோகேஷ் ராகுல் 8 ரன்களில் வெளியேறினாலும், மற்றொரு தொடக்க வீரர் 59 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க, தொடர்ந்து சொதப்பி வந்த புஜாரா 180 பந்துகளில் 91 ரன்கள் எடுத்து களத்தில் நிற்கிறார். அதேபோல், கேப்டன் விராட் கோலி 94 பந்துகளில் 45 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறார். இந்த பரபரப்பான சூழலில், இன்று நான்காவது நாள் ஆட்டம் நடைபெறுகிறது. இன்று ஒருநாள் முழுவதும் இந்தியா பேட்டிங் செய்துவிட்டால், வெற்றிப் பெற முடிகிறதோ இல்லையோ, நிச்சயம் தோல்வியில் இருந்து தப்பித்துவிடலாம்

Story first published: Saturday, August 28, 2021, 18:27 [IST]
Other articles published on Aug 28, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+