Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

"ஓட்டச் சொன்னா உருட்டுறாரே"... அக்ஷார் படேல் மீது பாயும் கவாஸ்கர்

டெல்லி: இந்திய சுழற்பந்து வீச்சாளர் அக்ஷார் படேலின் பந்து வீச்சு சரியில்லை. அவர் பந்தை அப்படியே உருட்டி விடுகிறார் என்று விமர்சித்துள்ளார் சுனில் கவாஸ்கர்.

இவர் டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு லாயக்கில்லை என்றும் அவரது பந்து வீச்சு படு சாதாரணமாக இருப்பதாகவும் கவாஸ்கர் கூறியிருப்பது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லியைச் சேர்ந்த இடது கை சுழற்பந்து வீச்சாளரான படேல், ஐபிஎல் போட்டிகள் மூலம் பிரபலமானவர். இந்த நிலையில் தற்போது இந்திய அணியிலும் இடம் பிடித்துள்ளார். ஜிம்பாப்வே தொடருக்குப் போய் வந்தார். இந்த நிலையில்தான் அவரை கடுமையாக விமர்சித்துள்ளார் கவாஸ்கர்.

பெரிய பவுலரே இல்லை

பெரிய பவுலரே இல்லை

இதுகுறித்து கவாஸ்கர் கூறுகையில், அக்ஷார் படேல், இந்தியாவின் மாற்று சுழற்பந்து வீச்சாளர் என்று கூறவே முடியாது. அவர் பந்தை உருட்டுகிறார். பந்து சரியாக பாய்வதில்லை.

எதிர்பார்ப்புக்கேற்ப போடுகிறார்

எதிர்பார்ப்புக்கேற்ப போடுகிறார்

பந்து எப்படி வருகிறது என்று பேட்ஸ்மென்களுக்குத் தெரியக் கூடாது. ஆனால் படேல் வீசும் பந்து இப்படித்தான் என்று எளிதில் ஊகித்து விட முடிகிறது. அது தவறு. அது நல்ல பவுலிங் இல்லை.

பந்தைத் திருப்ப வேண்டியதுதானே

பந்தைத் திருப்ப வேண்டியதுதானே

படேல் பந்தைத் திருப்புவதே இல்லை. மீடியம் பேஸை விட சற்று குறைவான வேகத்தில் பந்து போடுகிறார், அவ்வளவுதான்.

அவங்க மாதிரி வர முடியுமா

அவங்க மாதிரி வர முடியுமா

அஸ்வின், ஹர்பஜன் சிங், அமீத் மிஸ்ரா, கரண் சர்மா ஆகியோர்தான் தரமான ஸ்பின்னர்கள். நிச்சயம் படேல் அல்ல என்றார் கவாஸ்கர்.

18 ஒரு நாள் போட்டிகள்

18 ஒரு நாள் போட்டிகள்

படேல் இதுவரை 18 ஒரு நாள் போட்டிகள், 2 டுவென்டி 20 போட்டிகளில் இந்தியாவுக்காக ஆடியுள்ளார். ஒரு நாள் போட்டியில் 23 விக்கெட்கள் வீழ்த்தியுள்ளார். அவரது சராசரி 26.60 ஆக உள்ளது. வங்கதேச டூரில் 2 விக்கெட் எடுத்தார். ஜிம்பாப்வே தொடரில் 5 விக்கெட் வீழ்த்தினார்.

பிட்ச்சை மாத்துங்கப்பா

பிட்ச்சை மாத்துங்கப்பா

கவாஸ்கர் மேலும் கூறுகையில், சமீப காலமாக இந்தியா நல்லதொரு மாற்று ஸ்பின்னர்களைக் கண்டுபிடிக்கவில்லை. இதற்கு பிட்ச்தான் காரணம், ரஞ்சிப் போட்டிகளில் போடப்படும் பிட்ச் சரியில்லை என்றார் கவாஸ்கர்.

Story first published: Friday, July 24, 2015, 17:02 [IST]
Other articles published on Jul 24, 2015
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+