For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

உங்க கோபத்தை இங்கே காட்டாதீங்க.. தங்கமான வாய்ப்பு போச்சு.. புஜாரா, ரோகித்துக்கு கவாஸ்கர் அறிவுரை

அகமதாபாத் : ஆஸ்திரேலியாவுக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வீரர்கள் ரோகித், புஜாரா தங்கமான வாய்ப்பை வீணடித்து விட்டதாக கவாஸ்கர் குற்றம் சாட்டியுள்ளார்.

அகமதாபாத்தில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 480 ரன்கள் குவித்துள்ளது.

இதனையடுத்து களமிறங்கிய இந்திய அணியில் கேப்டன் ரோகித் சர்மா இமாலய ஸ்கோர் குவிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது.

 ஆட்டமிழப்பு

ஆட்டமிழப்பு

ஆனால் அவர் 35 ரன்களில் வெளியேறினார். இதேபோன்று நங்கூரம் போல் நின்று விளையாடி வந்த புஜாரா 8 ரன்களில் அரை சதத்தை தவறவிட்டார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய சுனில் கவாஸ்கர், பேட்ஸ்மேன்கள் தங்களுடைய இன்னிங்ஸை தொடங்கி நன்றாக செட்டாகி பெரிய ஸ்கோர் அடிக்க உத்வேகத்துடன் நிற்பார்கள். புஜாராவும் ரோகித்தும் நன்றாக விளையாடி சதம் அடிக்க குறியாக இருந்தார்கள்.

ஏமாற்றம்

ஏமாற்றம்

ஆனால் இருவரும் தங்களது விக்கெட்டை பறி கொடுத்து வெளியேறினார்கள். இருவரும் கடும் ஏமாற்றத்தை அடைந்திருப்பார்கள். ஏனென்றால் இது பேட்ஸ்மேன்களின் சொர்க்கம் போல் இருக்கிறது. இங்கே நீங்கள் பெரிய இலக்கை எட்டலாம். ஆனால் இருவரும் தங்களுக்கு கிடைத்த தங்கமான வாய்ப்பை வீணடித்து விட்டார்கள். இதனால் அவர்களுக்கு கடும் ஏமாற்றம் இருந்திருக்கும்.

உடைப்பார்கள்

உடைப்பார்கள்

நிச்சயமாக அவர்கள் தனி அறையில் சென்று தங்களுடைய கோபத்தை வெளிப்படுத்தி இருப்பார்கள். இருவரும் ஏதேனும் பொருட்களை உடைத்து இருப்பார்கள். நான் உங்களுக்கு ஒரு எடுத்துக்காட்டு கூறுகிறேன். நான் விளையாடும் காலத்தில் ஏதேனும் ஒரு வீரர் நன்றாக விளையாடிக் கொண்டிருக்கும்போது 30, 40 ரன்கள் ஆட்டம் இழந்து விட்டால் அந்த வீரர் அணியின் அறைக்கு வரும்போது மற்ற வீரர்கள் வெளியே சென்று விடுவார்கள்.

கவாஸ்கர் அனுபவம்

கவாஸ்கர் அனுபவம்

ஏதேனும் ஒரு, இரு வீரர் தான் உள்ளே இருந்து அங்கு என்ன நடக்கிறது என்று எங்களுக்கு சொல்வார்கள் என்று கவாஸ்கர் தன்னுடைய அனுபவத்தை கூறினார். ரோகித் சர்மா ஆட்டம் இழந்தது இந்திய அணிக்கு பெரும் பின்னடைவாக மாறியது. ஏனென்றால் தற்போது இருக்கும் டெஸ்ட் அணியில் ரோகித் சர்மா மட்டும்தான் அதிரடியாக விளையாடி ரன்களை குவிக்க கூடியவர். நேற்று அவர் ஆட்டம் இழந்தவுடன் இந்திய அணி ரன் குவிக்கும் வேதத்தை குறைத்துக் கொண்டது. இதனால் மூன்றாவது நாள் ஆட்டத்தில் வெறும் 253 ரன்கள் தான் இந்தியா அடித்தது குறிப்பிடத்தக்கது.

Story first published: Sunday, March 12, 2023, 11:29 [IST]
Other articles published on Mar 12, 2023
English summary
sunil Gavaskar feels Pujara and rohit sharma will be disappointed after missed out உங்க கோபத்தை இங்கே காட்டாதீங்க.. தங்கமான வாய்ப்பு போச்சு.. புஜாரா, ரோகித்துக்கு கவாஸ்கர் அறிவுரை
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+