ஆஸ்திரேலியாவுல பண்ணக்கூடாத விஷயங்களை மயங்க் செய்யறாரு... கவாஸ்கர் ஆதங்கம்
மெல்போர்ன் : ஆஸ்திரேலியாவிற்கு எதிரான கடந்த இரு டெஸ்ட் போட்டிகளில் துவக்க வீரர் மயங்க் அகர்வால் சிறப்பான ஆட்டங்களை ஆடவில்லை.
கடந்த 2018ல் இதே மெல்போர்ன் மைதானத்தில் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான தனது முதல் டெஸ்ட் போட்டியில் அபாரத்தை வெளிப்படுத்திய மயங்க் தற்போது கடந்த இரு போட்டிகளில், 17, 9, 0 மற்றும் 5 ரன்களை மட்டுமே எடுத்துள்ளார்
இந்நிலையில் ஆஸ்திரேலிய பிட்ச்களில் செய்யக்கூடாத செயல்பாடுகளை மயங்க் மேற்கொள்வதாக முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.

சமநிலையில் அணிகள்
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையில் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளை தொடர்ந்து தற்போது டெஸ்ட் போட்டிகளில் இரு அணிகளும் மோதி வருகின்றன. இந்த டெஸ்ட் தொடரின் இரு போட்டிகள் நடந்து முடிந்துள்ள நிலையில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியை பெற்று சமநிலையில் உள்ளன.

வீரர்கள் நாளை பயணம்
வரும் 7ம் தேதி இரு அணிகளுக்கிடையிலான 3வது டெஸ்ட் போட்டி சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் துவங்கி நடைபெறவுள்ளது. இதில் பங்கேற்பதற்காக மெல்போர்னிலிருந்து நாளை தங்களது சிட்னி பயணத்தை இரு அணிகளும் மேற்கொள்ளவுள்ளன.

செய்யக்கூடாத முயற்சி
இதனிடையே கடந்த இரு போட்டிகளில் விளையாடியுள்ள இநதிய வீரர் மயங்க் அகர்வால், ஆஸ்திரேலிய பிட்ச்களில் முயற்சிக்க கூடாதவற்றை செயல்படுத்தி வருவதாக முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார். கடந்த இரு டெஸ்ட் போட்டிகளில் மயங்க் அகர்வால் முறையே, 19, 9, 0 மற்றும் 5 ரன்களை மட்டுமே அடித்துள்ளார்.

நெருக்கடிக்கு காரணம்
தன்னுடைய பேட்டிங் ஸ்டைலை மயங்க் மாற்றிக் கொண்டுள்ளதே அவரது நெருக்கடிக்கு காரணம் என்றும் கவாஸ்கர் குறிப்பிட்டுள்ளார். தன்னுடைய கால்களுக்கிடையில் அவர் விடும் இடைவெளியும் அவர் சொதப்புவதற்கு காரணம் என்றும் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications