கோஹ்லியிடம் 'அப்படி' கேட்ட கவாஸ்கரை ட்விட்டரில் துவைத்து காயப் போட்ட மக்கள்
கொல்கத்தா: கொல்கத்தாவில் நடந்த ஐபிஎல் போட்டியின்போது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் கேப்டன் விராட் கோஹ்லியிடம் அவர் வந்திருக்கிறாரா என்று நடிகை அனுஷ்காவை பற்றி கேட்டு ட்விட்டரில் மக்களிடம் வாங்கிக் கட்டிக் கொண்டுள்ளார் சுனில் கவாஸ்கர்.
கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன்ஸில் விராட் கோஹ்லி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி கௌதம் கம்பீர் தலைமையிலான கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியுடன் மோதியது. அப்போது டாஸ் போட இரு அணிகளின் கேப்டன்களும் மைதானத்திற்கு வந்தபோது முன்னாள் கிரிக்கெட் வீரர் சுனில் கவாஸ்கர் கோஹ்லியிடம் அவர் வந்திருக்கிறாரா என்று நடிகை அனுஷ்கா பற்றி கேட்டார். அதற்கு கோஹ்லியும் வெட்கத்தோடு வருவார் என்றார்.
இதையடுத்து கவாஸ்கரை மக்கள் ட்விட்டரில் திட்டித் தீர்த்துள்ளனர்.
எரிச்சல்
கவாஸ்கரின் கமென்டரி ரமீஸ் ராஜா அல்லது ரஸ்ஸல் அர்னால்ட் ஆகியோரை விட மிகவும் எரிச்சலைடயும் வகையில் உள்ளது என்று குமார் ரங்கராஜன் என்பவர் ட்வீட் செய்துள்ளார்.
கவாஸ்கர்
அவருடைய முதலாவது உலகக் கோப்பை மசாலா போட்டியில் 60 ஓவர்களில் 36 ரன் எடுத்த கவாஸ்கர் இந்த மசாலா கிரிக்கெட்டை வேகமாக கற்றுக் கொண்டுவிட்டார் என அக்ஷய் மஸ்கர் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
என்ன கேள்வி?
அவர் இங்கு வந்திருக்கிறாரா? என்ன கருமம்பிடித்த கேள்வி இது? கிரிக்கெட்டோடு நிறுத்திக் கொள்ளுங்கள் என்கிறார் தேப்நாத் சௌத்ரிக்.
சும்மாவிடுங்கள்
அவர் இங்கு வந்திருக்கிறாரா? கடவுளே. அவர்கள் இருவரையும் தனியே விடுங்கள் #virat #ipl #gavaskar என்று தெரிவித்துள்ளார் ஹரிஷ் சங்கர்.
மோசம்
இருப்பதிலேயே சுனில் கவாஸ்கர் தான் மோசமான வர்ணனையாளரா? அதை நான் சனிக்கிழமை இங்கிலாந்தில் இருந்து பார்த்தேன். #gavaskar #terrible @IPL @SkyCricket என ஹெபி சங்கேரா ட்வீட் செய்துள்ளார்.


Click it and Unblock the Notifications