“அதை மட்டும் செய் போதும்” சஞ்சு சாம்சனுக்கு கவாஸ்கர் பலே ஐடியா.. இனி இந்திய அணியில் தொடர் வாய்ப்பு!
மும்பை: சஞ்சு சாம்சன் இன்னும் ஒரே ஒரு விஷயத்தை செய்தால், இனி இந்திய அணியில் இருந்து நீக்கப்படவே மாட்டார் என கவாஸ்கர் கூறியுள்ளார்.
தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான தொடரை வெற்றிகரமாக முடித்த இந்திய அணி, அடுத்ததாக அயர்லாந்துக்கு செல்கிறது.
அந்த அணியுடன் 2 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் மோதுகிறது. இந்த போட்டிகள் வரும் ஜூன் 26 மற்றும் 28ம் தேதிகளில் நடைபெறவுள்ளது.

அயர்லாந்து டி20 தொடர்
இந்திய அணியின் முன்னணி வீரர்கள் இங்கிலாந்து சுற்றுப்பயணத்திற்கு சென்றிருப்பதால், அயர்லாந்து தொடருக்கு ஹர்திக் பாண்ட்யா தலைமையில் புதிய படை உருவாக்கப்பட்டுள்ளது. இதில் தென்னாப்பிரிக்க தொடரில் ஆடியவர்கள் மட்டுமின்றி, மேலும் சில இளம் வீரர்களுக்கும் வாய்ப்பு தரப்பட்டுள்ளது.

என்ன பிரச்சினை
இதில் முக்கியமான வீரர் சஞ்சு சாம்சன் தான். நிலையான ஃபார்ம் இல்லை என்ற விமர்சனத்தை சந்தித்துள்ள, அவருக்கு சரியான வாய்ப்புகள் கிடைப்பதில்லை. கடைசியாக இலங்கை தொடரில் பங்குபெற்ற சஞ்சு சாம்சன், ஐபிஎல்-ல் சிறப்பாக விளையாடததால் மீண்டும் இந்திய அணிக்குள் வந்துள்ளார்.

கவாஸ்கர் விளக்கம்
இந்நிலையில் இதுகுறித்து கவாஸ்கர் பேசியுள்ளார். அதில், அனைவருக்குமே அதிகப்படியான வாய்ப்புகள் கொடுக்க வேண்டும் தான். ஆனால் அதனை அவர்கள் தான் தக்கவைத்துக்கொள்ள வேண்டும். அது சஞ்சு சாம்சனுக்கு ஒரு பிரச்சினையாக உள்ளது. சஞ்சு சாம்சன் மிகவும் திறமையான வீரர். ஆனால் அவரின் ஷாட் செலக்ஷன்கள் தான் மோசமாக உள்ளன.

என்ன மாற்ற வேண்டும்
முதல் பந்து முதலே அடித்து ஆட வேண்டும் என சஞ்சு சாம்சன் நினைப்பார். ஒவ்வொரு வீரருக்கும் சரியான வாய்ப்பு வரும் அப்போதுதான் இதுபோன்று செய்ய வேண்டும். சஞ்சு சாம்சன் மட்டும் சரியான ஷாட் தேர்வுகள் மற்றும் நிலையான ஃபார்மில் இருந்தால், இந்திய அணியில் அவரின் இடத்தை இனி யாராலும் அசைக்க முடியாது என கவாஸ்கர் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications