Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

2 நாட்கள் மட்டுமே அவகாசம் இருக்கு.. ரிஷப் பண்ட் செய்யும் பெரும் தவறு.. கவாஸ்கர் எச்சரிக்கை!

மும்பை: இந்திய அணி கேப்டன் ரிஷப் பண்ட்-க்கு 2 நாட்கள் மட்டுமே அவகாசம் இருப்பதாக சுனில் கவாஸ்கர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

நேற்று நடைபெற்ற 3வது டி20 போட்டியில் இந்திய அணி தனது முதல் வெற்றியை பெற்றதால், தற்போது 2 - 1 என்ற நிலையில் உள்ளது.

ரிஷப் பண்ட் சொதப்பல்

ரிஷப் பண்ட் சொதப்பல்

இந்த போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றாலும், ரசிகர்களுக்கு பெரும் வருத்தமும் உள்ளது. அதற்கு காரணம் ரிஷப் பண்ட்-ன் ஃபார்ம் தான். டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக உள்ள ரிஷப் பண்ட், ஐபிஎல் தொடரில் சொதப்பினார். தற்போது தென்னாப்பிரிக்க தொடரில் 29, 5, 6 என சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்துள்ளார்.

குவியும் விமர்சனங்கள்

குவியும் விமர்சனங்கள்

பண்ட்-ன் இந்த சொதப்பலால் ரசிகர்கள் அதிருப்தியில் உள்ளனர். ஏற்கனவே பண்ட்-க்கு அதிரடி மட்டுமே தெரிகிறது. ஆட்டத்தின் போக்கிற்கு ஏற்ற வகையில் ஆட தெரியவில்லை, அவரை நீக்க வேண்டும் என்ற விமர்சனங்கள் உள்ளன. தற்போது அது அதிகரித்துள்ளது.

கவாஸ்கரின் அட்வைஸ்

கவாஸ்கரின் அட்வைஸ்

இந்நிலையில் இதற்கு முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் அட்வைஸ் கூறியுள்ளார். அதில், பண்ட் வந்தவுடன் நல்ல அதிரடி காட்டுவார் என மக்கள் நினைக்கின்றனர். ஆனால் பண்ட் ஏமாற்றத்தையே கொடுக்கிறார். இதற்கு காரணம் கேப்டன்சி தான். ஒரு கேப்டனாக இருக்கும் போது, அவர் தனது ஆட்டத்தை கவனிக்காமல், மற்ற பவுலர் மற்றும் பேட்ஸ்மேன்களின் ஆட்டதில் கவனம் செலுத்துகிறார். இதனால் அவுட்டாகிறார்.

Recommended Video

IND vs SA Rahul Dravid Planனை உடைத்த Shreyas Iyer | *Cricket
2 நாள் அவகாசம்

2 நாள் அவகாசம்

ரிஷப் பண்ட்-க்கு அடுத்த 2 நாட்கள் அவகாசம் உள்ளது. இந்திய அணி முதல் வெற்றியை பதிவு செய்துவிட்டதால் இனி கவலை வேண்டாம். தனது பேட்டிங்கில் என்ன பிரச்சினை. டைமிங் சரியில்லையா?, ஷாட்டை தேர்வு செய்வதில் பிரச்சினையா என்பதை சரிபார்த்துக்கொள்ள வேண்டும். இல்லையென்றால் எல்லாமே சொதப்பிவிடும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Story first published: Wednesday, June 15, 2022, 12:33 [IST]
Other articles published on Jun 15, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+