Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

“இப்பவே முடிவு பண்ணாதீங்க”.. இந்திய அணி குறித்து ரசிகர்கள் கேட்ட கேள்வி.. கடுப்பில் கொதித்த கவாஸ்கர்

மும்பை: டி20 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணி குறித்து முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் கடுமையாக பதில் கூறியுள்ளார்.

Recommended Video

T20 World Cup இந்திய அணியின் Bowling Unit குறித்து Sunil Gavaskar கருத்து Cricket

டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் அக்டோபர் மாதம் முதல் ஆஸ்திரேலியாவில் நடைபெறவுள்ளது.

இந்த தொடருக்காக ரோகித் சர்மா தலைமையில் 15 பேர் கொண்ட இந்திய அணியை பிசிசிஐ சமீபத்தில் அறிவித்தது.

 இந்திய அணி அறிவிப்பு

இந்திய அணி அறிவிப்பு

இந்திய அணியின் பேட்டிங் வரிசையில் எந்தவித மாற்றமும் இல்லாத நிலையில், பந்துவீச்சில் சில மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளது. ஹர்ஷல் பட்டேல், பும்ரா ஆகியோர் மீண்டும் அணிக்கு திரும்பியுள்ளனர். இதே போல சீனியர் வீரர் முகமது ஷமி ஸ்டாண்ட் பை வீரராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்திய அணியின் பவுலிங் திட்டம் குறித்து பல்வேறு குற்றச்சாட்டுக்களை ரசிகர்கள் முன்வைத்து வருகின்றனர். இந்நிலையில் அதற்கு கவாஸ்கர் பதில் கூறியுள்ளார்.

 ரசிகரின் கேள்வி

ரசிகரின் கேள்வி

ஆன்லைனில் ஏற்பாடு செய்யப்பட்ட சிறப்பு நிகழ்ச்சியில் ரசிகர் ஒருவர், " ஆஸ்திரேலிய களம் வேகப்பந்துவீச்சு மற்றும் பவுன்ஸர்களுக்கு சாதகமாக இருக்கும். ஆனால் ஹர்ஷல் பட்டேலின் பவுலிங்கில் பெரியளவில் வேகம் இல்லை. இதனால் அவரின் ஓவரில் சுலபமாக பேட்ஸ்மேன்கள் சிக்ஸர்களை பறக்க விடுவார்கள் அல்லவா? என கேள்வி எழுப்பினார்.

கவாஸ்கர் பதில்

கவாஸ்கர் பதில்

இந்த கேள்வியால் கோபமடைந்த சுனில் கவாஸ்கர், அதனை உலகக்கோப்பை தொடங்கியவுடன் பார்ப்போம். ஹர்ஷல் அதிக ரன்களை விட்டுக்கொடுப்பார் என எப்படி முன்கூட்டியே முடிவுக்கு வருகின்றனர். அவர் மெதுவாக பவுலிங் செய்கிறார் என்பதற்காக நீங்களே முடிவெடுத்துக்கொள்வதா? முதலில் போட்டி தொடங்கட்டும், அதன்பின்னர் அது நடந்தது, இது நடந்தது என கேள்வி எழுப்புங்கள் என கடுமையாக பதிலளித்தார்.

பவுலிங் ப்ளான்

பவுலிங் ப்ளான்

தொடர்ந்து பேசிய அவர், இந்தியாவின் பவுலிங் திட்டம் குறித்து பேசினார். இந்திய அணியில் பும்ரா, ஹர்ஷல் பட்டேல் வேகப்பந்துவீச்சுக்கு ஜோடி சேர்ந்தால், ஹர்திக் பாண்ட்யா 3வது வேகப்பந்துவீச்சாளராக செயல்படுவார். பிட்ச்-ல் நன்கு புற்கள் இருந்தால் புவனேஷ்வர்குமாரும் சேர்க்கப்பட்டு 4 வேகப்பந்துவீச்சாளர்களுடன் செல்லவும் வாய்ப்புள்ளது. இது சிறப்பாக இருக்கும் என கவாஸ்கர் பேசியுள்ளார்.

Story first published: Tuesday, September 13, 2022, 21:14 [IST]
Other articles published on Sep 13, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+