அமுல் பேபியை திட்டாதீங்க.. கேஎல் ராகுலுக்கு கவாஸ்கர் திடீர் ஆதரவு.. இது கொஞ்சம் ஓவரா தெரியல
மும்பை : இந்திய கிரிக்கெட் அணியில் தொடர்ந்து கே.எல் ராகுலுக்கு வாய்ப்பு வழங்கப்படுவது குறித்து ரசிகர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
நேற்று கே எல் ராகுல் தொடர்பாக முன்னாள் கிரிக்கெட் வீரர் வெங்கடேஷ் பிரசாத் வெளியிட்ட பதிவு சமூக வலைத்தளத்தில் வைரல் ஆனது.
இதேபோன்று கே எல் ராகுல் நேற்று சமூக வலைத்தளத்தில் நல்ல தொடக்கமாக இந்த தொடர் அமைந்தது என்று பதிவிட்டார்.

ரசிகர்கள் கிண்டல்
அதற்கு ரசிகர்கள், நீங்கள் அடித்த 20 ரன்களால் தான் இந்திய அணி நேற்று வெற்றி பெற்றது. இல்லையென்றால் இந்தியா தோல்வி அடைந்திருக்கும் என்று அவரை கிண்டல் செய்யும் விதமாக ரசிகர்கள் பதிவிட்டனர். மேலும் சிலர் கே எல் ராகுல் தனது அபாரமான திறமையை வீணடிப்பதாக விமர்சித்துள்ளனர். இந்த நிலையில் கவாஸ்கர் கே எல் ராகுல் குறித்து பேசி உள்ள கருத்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

ராகுலுக்கு வாய்ப்பு
இதில் கேஎல் ராகுல் கடந்த இரண்டு ஆண்டுகளாக நன்றாகவே விளையாடி வருகிறார். அவருக்கு இன்னும் ஒரு வாய்ப்பு கொடுக்க வேண்டும் என நான் நினைக்கிறேன். கண்டிப்பாக டெல்லியில் நடைபெறும் டெஸ்ட் போட்டியில் கேஎல் ராகுல் களம் இறக்கப்படுவார். அந்தப் போட்டியில் அவர் சிறப்பாக விளையாடவில்லை என்றால் பார்மில் இருக்கும் சுப்மன் கில்லை ராகுலுக்கு பதிலாக களம் இருக்கலாம்.

தென்னாப்பிரிக்காவில் சதம்
நான் ஏன் ராகுலுக்கு இன்னொரு வாய்ப்பு வழங்க வேண்டும் என்று கூறுகிறேன் என்றால் இந்திய அணியின் பேட்டிங் பயிற்சியாளர் விக்ரம் ராத்தோர் சொல்வது போல் கடினமான ஆடுகளத்தில் கே எல் ராகுல் தென்னாப்பிரிக்காவில் சதம் அடித்தார். அவருக்கு சிறப்பான திறமை இருக்கிறது. ஆனால் கடந்த சில போட்டிகளில் அவர் பார்மில் இல்லாமல் திணறி வருகிறார்.

திறமைக்காக தரலாம்
ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ரன் குவிப்பது மிகப்பெரிய சவால் தான். இதனால் நடப்பு ஆஸ்திரேலிய தொடரில் அவர் விளையாடி ரன்கள் சேர்த்தால் நிச்சயமாக அவருடைய உத்வேகம் நன்றாக அதிகரிக்கும். அதன் பிறகு அவர் அணியில் நீடிப்பார் என நம்புகிறேன். ராகுலின் திறமைக்காகவே அவருக்கு இன்னொரு வாய்ப்பை இந்திய அணி நிர்வாகம் கொடுக்க வேண்டும் என சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.கவாஸ்கரின் இந்த கருத்துக்கு ரசிகர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.


Click it and Unblock the Notifications