Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

“இதெல்லாம் கொஞ்சம் கூட சரியில்லை”.. டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி தேர்வு.. கவாஸ்கர் பதில்!

மும்பை: டி20 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணி தேர்வு குறித்து முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் பேசியுள்ளார்.

Recommended Video

T20 World Cup 2022: India's Squad அறிவிப்பு! Bumrah, Shami வந்துட்டாங்க | Aanee's Appeal | *Cricket

வரும் அக்டோபர் மாதம் ஆஸ்திரேலியாவில் நடைபெறவுள்ள டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்காக அனைத்து அணிகளும் தயாராகி வருகின்றன.

அந்தவகையில் ரோகித் தலைமையிலான 15 பேர் கொண்ட இந்திய அணியை நேற்று பிசிசிஐ அறிவித்தது.

இந்திய படை

இந்திய படை

பேட்டிங்கில் ரோகித், ராகுல், சூர்யகுமார் யாதவ், விராட் கோலி, பண்ட், தினேஷ் கார்த்திக் என எதிர்பார்த்ததை போன்று வந்த சூழலில் பவுலிங்கில் முக்கிய மாற்றங்களை செய்தனர். அக்‌ஷர் பட்டேல், ஜஸ்பிரித் பும்ரா, ஹர்ஷல் பட்டேல், முகமது ஷமி, தீபக் சஹார் என பல வீரர்கள் மீண்டும் இந்திய அணிக்கு திரும்பியுள்ளனர். எனினும் சஞ்சு சாம்சன் ஏன் சேர்க்கப்படவில்லை, தீபக் சஹார் ஏன், மெயின் அணியில் இல்லை என விமர்சனங்கள் வந்துக்கொண்டிருக்கின்றன.

கவாஸ்கர் விளக்கம்

கவாஸ்கர் விளக்கம்

இந்நிலையில் முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் இதற்கு பதிலளித்துள்ளார். அதில், என்னைப்பொறுத்தவரை இது மிகச்சிறந்த அணியாக உள்ளது. இந்திய அணிக்கு இலக்கை கட்டுப்படுத்துவதில் தான் சிக்கல் இருந்தது. தற்போது ஜஸ்பிரித் பும்ரா, ஹர்ஷல் பட்டேல் ஆகியோர் மீண்டும் வந்துள்ளதால், இனி எப்படிபட்ட இலக்கையும் கட்டுப்படுத்தி ஆட்டத்தை கடைசி வரை எடுத்து செல்ல முடியும்.

இடதுகை வேகப்பந்துவீச்சாளர்

இடதுகை வேகப்பந்துவீச்சாளர்

தீபக் சஹார் என்ற சிறந்த பவுலரை பேக் அப்- ஆக வைத்துள்ளனர். ஆனால் அவரின் இடத்தில் இடதுகை வேகப்பந்துவீச்சாளராக அர்ஷ்தீப் சிங்கை கொண்டு வந்துள்ளதால் பிரச்சினை இல்லை. அணியில் ஒரு இடதுகை பவுலர் இருப்பது மிகவும் அவசியமான ஒன்று தான். எனவே டி20 உலகக்கோப்பை தொடரை சமாளிக்க இந்த அணி போதும் என்று தான் தோன்றுகிறது.

இனி பேசாதீர்கள்

இனி பேசாதீர்கள்

அணி தேர்வு அனைத்தும் முடிந்துவிட்டன. எனவே இனி அதை செய்திருக்கலாம், அவருக்கு ஏன் வாய்ப்பில்லை என்று கேட்பது சரியாக இருக்காது. தேர்வு செய்யப்பட்டிருக்கும் அணிக்கு நமது 100 சதவீத ஆதரவை கொடுத்து அனுப்பி வைப்போம். இது நல்ல அணி தான் என சுனில் கவாஸ்கர் கூறியுள்ளார்.

Story first published: Tuesday, September 13, 2022, 17:49 [IST]
Other articles published on Sep 13, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+