Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

நரேந்திர மோடி மைதானத்திற்கு ஆபத்து காத்திருக்கு.. கவாஸ்கர் எச்சரிக்கை.. காரணம் என்ன தெரியுமா?

அகமதாபாத் : உலகிலே அதிக பார்வையாளர்கள் அமர்ந்து பார்க்கும் பெரிய மைதானமாக அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானம் அமைக்கப்பட்டிருக்கிறது.

இங்கு ஐபிஎல் இறுதிப் போட்டி ஐபிஎல் தொடக்கப் போட்டி என பல்வேறு முக்கியத்துவம் வாய்ந்த கிரிக்கெட் போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது.

மேலும் நடப்பாண்டில் ஐசிசி உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியை இங்கு நடத்த பிசிசிஐ திட்டமிட்டு வருகிறது.

ஆடுகளம்

ஆடுகளம்

இந்த நிலையில் இந்தியா ஆஸ்திரேலியா அணிகள் மூலம் கடைசி டெஸ்ட் போட்டி அகமதாபாத் மைதானத்தில் நடைபெறுகிறது. ஆனால் இந்த போட்டிக்கு ஒரு ஆபத்து காத்திருக்கிறது. இந்திய அணி அகமதாபாத்தில் உள்ள கடைசி டெஸ்ட் போட்டியில் வெல்ல வேண்டும் என்பதற்காக ஆடுகளத்தில் கடைசி கட்ட மாற்றங்களை மேற்கொள்ளலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

ஐசிசி விதி

ஐசிசி விதி

இதன் காரணமாக போட்டி இரண்டு அல்லது மூன்று நாட்கள் முடிவடைந்து விட்டால் இந்த ஆடுகளம் மோசம் என தரச் சான்றிதழை ஐசிசி வழங்க வாய்ப்பு இருப்பதாக சுனில் கவாஸ்கர் எச்சரிக்கை கொடுத்துள்ளார்.மேலும் மைனஸ் 3 புள்ளிகளை ஐசிசி வழங்கினால் இந்தியா உலகக் கோப்பை தொடர் வரை எந்த கிரிக்கெட் போட்டியையும் அகமதாபாத்தில் நடத்த முடியாது என்றும் தெரிவித்துள்ளார்.

கடந்த முறை

கடந்த முறை

மேலும் அகமதாபாத் ஆடுகளத்தில் பத்தாண்டுகளுக்கு முன்பு இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் சுழற் பந்து வீச்சுக்கு சாதகமாக மைதானம் அமைக்கப்பட்டதாக குறிப்பிட்ட கவாஸ்கர், அது இந்திய அணிக்கு ஆபத்தாக முடிவடைந்து விட்டதாக கூறியுள்ளார் .அதேபோல ஒரு ஆடு களத்தை தற்போது அமைப்பது சரியான முடிவாக இருக்காது என கவாஸ்கர் குறிப்பிட்டுள்ளார்.

கவாஸ்கர் வலியுறுத்தல்

கவாஸ்கர் வலியுறுத்தல்

பேட்டிற்கும் , பந்திற்கும் சரிசமமாக இருக்கக்கூடிய வகையில் ஆடுகளத்தை அமைக்க வேண்டும் என கவாஸ்கர் கூறியுள்ளார். டெஸ்ட் போட்டியின் முதல் இரண்டு நாளில் வேகப்பந்துவீச்சாளர்களும் பேட்ஸ்மேன்களும் விளையாடக் கூடிய வகையில் ஆடுகளம் இருக்க வேண்டும் எனவும் அவர் கூறினார். அடுத்து இரண்டு நாட்கள் பந்து சற்று திரும்புவது நல்ல ஆடுகளமாக இருக்கும் என கவாஸ்கர் கூறியுள்ளார்.

Story first published: Sunday, March 5, 2023, 18:20 [IST]
Other articles published on Mar 5, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+