Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஜாம்பவானின் கவனத்தை ஈர்த்த தமிழக வீரரின் செயல்... ஆட்டத்தை விட இதுதான் பெஸ்ட்.. என்ன நடந்தது?

சென்னை: இங்கிலாந்து அணிக்கு எதிராக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அரை சதம் அடித்த இந்திய வீரர் வாஷிங்டன் சுந்தர் குறித்து முன்னாள் கிரிக்கெட் வீரர் சுனில் கவாஸ்கர் பாராட்டு தெரிவித்துள்ளார்.

இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதும் முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. முதல் இன்னிங்சில் ஆதிக்கம் செலுத்தி ஆடி வந்த இங்கிலாந்து அணி 578 ரன்களை குவித்து ஆட்டமிழந்தது.

இதனையடுத்து களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க வீரர்கள் சுப்மன் கில் 29, ரோகித் 6 ரன்களுடன் வெளியேறினர்.

எப்படி

எப்படி

பின்னர், இறங்கிய துணை கேப்டன் ரஹானே 1 , கேப்டன் கோலி 11 ரன்கள் எடுத்து பெவிலியன் திருப்பினார்கள். இதனால், சரிவில் இருந்த இந்திய அணியை புஜாரா மற்றும் பண்ட் இருவரும் சிறப்பாக விளையாடி அணியின் ரன்னை சற்று உயர்த்தினார்கள்.

அதிரடி

அதிரடி

புஜாரா ஒருபுறம் பொறுமையாக விளையாட மறுபுறம் பண்ட் அதிரடியாக விளையாடினார். ஆனால் ஒரு கட்டத்தில் புஜாரா 73 ரன்களில் ஆட்டமிழந்தார். தொடர்ந்து அதிரடியாக விளையாடிய பண்ட் 91 ரன்களில் ஆட்டமிழந்தார்.

நான்காம் நாள்

நான்காம் நாள்

இறுதியாக 3-ஆம் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 6 விக்கெட்டுகளை இழந்து 257 ரன்கள் எடுத்தநிலையில், இன்று 4-ம் நாள் ஆட்டம் தொடங்கியது. களத்தில் சிறப்பாக விளையாடி வந்த தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர் யாரும் எதிர்ப்பார்க்காத வகையில் அரைசதம் விளாசினார்.

 அவுட் இல்லை

அவுட் இல்லை

85 ரன்கள் எடுத்த அவர் இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். அதில் 12 பவுண்டரி அடங்கும். இதனால் இந்திய அணி 337 ரன்களை எடுத்தது. சமீபத்தில் நடந்து முடிந்த ஆஸ்திரேலிய டெஸ்ட் டொடரில் அறிமுகமான வாஷிங்டன் சுந்தர், அரை சதம் அடித்து அணியை மீட்டார்.

சரிவு

சரிவு

இதன் மூலம் அறிமுகமான மூன்றே இன்னிங்சில் 2 அரை சதம் கடந்ததால் பல கிரிக்கெட் ஜாம்பவான்களின் கவனம் சுந்தரின் பக்கம் திரும்பியுள்ளது. குறிப்பாக முன்னாள் கிரிக்கெட் விரர் சுனில் கவாஸ்கர் பாராட்டு தெரிவித்துள்ளார். இது குறித்து பேட்டியளித்த அவர், வாஷிங்டன் சுந்தர் - அஸ்வின் ஜோடி இந்திய அணியை சரிவில் இருந்து மீட்டதாக கூறியுள்ளார்.

சுந்தர்

சுந்தர்

அவர்கள் இருவரும் ஒருவேளை தொடக்கத்திலேயே அவுட் ஆகியிருந்தால் இங்கிலாந்து அணியின் மிகவும் வலுப்பெற்று இருக்கும் என தெரிவித்துள்ளார். வாஷிங்டன் சுந்தரின் இன்றைய கிரிக்கெட் ஷாட்கள் மிக அற்புதமாக இருந்தது. அவர் சதம் அடித்திருக்க வேண்டும், ஆனால் 7வது வீரராக களம் இறங்குபவர்கள் சதம் அடிப்பது கடினம், எனினும் சுந்தரின் 85 நாட் அவுட் என்பது சதமடித்ததற்கு சமமாகும்" இவ்வாறு தெரிவித்துள்ளார்.

சிறப்பு

சிறப்பு

இதுமட்டுமல்லாமல் சுந்தரின் ஆட்டத்தை தாண்டி அவரின் செயலும் கவாஸ்கரின் கவனம் ஈர்த்துள்ளது. இங்கிலாந்து பந்துவீச்சாளர்கள் ஆண்டர்சன் மற்றும் ஆர்ச்சர் ஆகியோர், சுந்தருக்கு கடும் நெருக்கடி கொடுத்த போதும் அதனை அவர் கையாண்ட விதம் பாராட்டுக்குறியது என கூறியுள்ளார். மேலும் இதன் மூலம் அவர் ஒரு நல்ல வீரர் என்பதை நிரூபித்துள்ளார் என்றும் கவாஸ்கர் பெருமிதம் தெரிவித்துள்ளார்.

Story first published: Monday, February 8, 2021, 21:29 [IST]
Other articles published on Feb 8, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+