For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

பாக். பிரதமராக பாபர் அசாம்.. கோப்பை வென்று கொடுத்தால் கிடைக்குமாம்.. கவாஸ்கர் பேச்சு - என்ன காரணம்!

மெல்பேர்ன்: பாகிஸ்தான் அணி உலகக்கோப்பையை வென்று கொடுத்தால் அந்நாட்டின் பிரதமராவார் என சுனில் கவாஸ்கர் கூறியுள்ளார்.

ஆஸ்திரேலியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் டி20 உலகக்கோப்பை தொடர் இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகள் இறுதிப்போட்டியில் மோதவுள்ளன.

இரு அணிகளும் மோதும் இந்த போட்டி வரும் நவம்பர் 14ம் தேதியன்று மெல்பேர்னில் நடைபெறவுள்ளது. இந்திய நேரப்படி மதியம் 1.30 மணிக்கு போட்டி தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் போட்டி

பாகிஸ்தான் போட்டி

கடந்த 2008ம் ஆண்டுக்கு பிறகு பாகிஸ்தான் அணி 14 ஆண்டுகளாக டி20 உலகக்கோப்பையை வெல்ல காத்துக்கொண்டுள்ளது. அதற்கு சிறப்பான வாய்ப்பாக இந்த முறை பாகிஸ்தானுக்கு அமைந்துள்ளது. லீக் சுற்றுடன் தொடரை விட்டு வெளியேறும் வரை சென்றுவிட்டு, அதிர்ஷ்டவசமாக அரையிறுதியில் சென்றது. அதிலும் நியூசிலாந்து அணியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு சென்றது. எனவே கோப்பையை வெல்ல பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

கவாஸ்கரின் கருத்து

கவாஸ்கரின் கருத்து

இந்நிலையில் பாகிஸ்தான் அணி குறித்து இந்திய முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் பேசியுள்ளார். அதில், ஒருவேளை இந்த உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் பாகிஸ்தான் வெற்றி பெற்றுவிட்டால், 2048ம் ஆண்டு பாகிஸ்தான் நாட்டின் பிரதமராக பாபர் அசாம் தான் இருப்பார் என வேடிக்கையாக கூறியுள்ளார். இதன் மூலம் அவர் இம்ரான் கானை தான் மறைமுகமாக குறிப்பிட்டுள்ளார்.

காரணம் என்ன

காரணம் என்ன

அதாவது 2008ம் ஆண்டு இம்ரான் கான் தலைமையில் தான் பாகிஸ்தான் டி20 உலகக்கோப்பையை வென்றது. அவர் தற்போது அந்நாட்டின் பிரதமராக உள்ளார். எனவே இந்தாண்டு பாபர் அசாம் வென்று கொடுத்தால் அவரும் வருங்காலத்தில் பிரதமராக வரலாம் என கிண்டலடித்துள்ளார்.

புதிய குழப்பம்

புதிய குழப்பம்

இது ஒருபுறம் இருக்க, இந்த இறுதிப்போட்டியில் முடிவு எட்டப்படுமா என்பதிலேயே சந்தேகம் நிலவுகிறது. மெல்பேர்ன் நகரத்தில் மழைக்கான வாய்ப்பு 100% சதவீதம் உள்ளது. ரிசர்வ் நாளிலும் மழை பெய்யும் என்பதால் போட்டி ரத்தாக வாய்ப்புள்ளது. ஒருவேளை ரத்தானால் இரு அணிகளும் வெற்றியாளராக அறிவிக்கப்படுவார்கள்.

Story first published: Saturday, November 12, 2022, 14:54 [IST]
Other articles published on Nov 12, 2022
English summary
Former Indian cricketer Sunil Gavaskar hilarious remark about Pakistan captain Babar azam ahead of T20 World Cup 2022 final
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+