ஐ.சி.சி. தொடர்களை வெல்லாததற்கு கோலி காரணம் இல்லை..!! இது தான் பிரச்சினை.. கவாஸ்கர் கருத்து..!!
பார்ல்: ஐ.சி.சி. தொடர்களை இந்தியா வெல்லாததே விராட் கோலி தனது கேப்டன் பொறுப்பை இழக்க காரணமாக பார்க்கப்பட்டது.
இந்த நிலையில், செய்தி நிறுவனம் ஒன்றுக்கு இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கவாஸ்கர் பேட்டி அளித்தார்.
அதில் ஐ.சி.சி தொடர்களையும், அந்நிய மண்ணிலும் இந்தியாவில் ஏன் வெற்றி பெற முடியவில்லை என்று குறித்து பேசினார். இதனை தற்போது காணலாம்.

தொடர் நாயகன்
இந்திய அணி கடந்த 2013ஆம் ஆண்டுக்கு பிறகு எந்த ஒரு ஐ.சி.சி. தொடரையும் வெல்லவில்லை. அதற்கு காரணம் இந்திய அணியில் ஒரு ஆல்ரவுண்டர் இல்லாததே பிரச்சினை என்று கூறினார். 2011ஆம் ஆண்டு இந்திய அணி உலகக் கோப்பை வென்றதுக்கு காரணம் யுவராஜ் சிங் ஒரு சிறந்த ஆல் ரவுண்டராக செயல்பட்டார். தொடர் நாயகன் விருதையும் வென்றார்

ரெய்னா
இதே போன்று 1983ஆம் ஆண்டு உலகக் கோப்பை, 1985ஆம் ஆண்டு உலக சாம்பியன்ணிப் ஆகியவற்றை வென்றதுக்கு காரணமும் இந்தியாவின் ஆல் ரவுண்டர்கள் தான். ஒரு காலத்தில் இந்தியாவின் பேட்ஸ்மேன்களுக்கு சுழற்பந்தவீச தெரியும், யுவராஜ் சிங், ரெய்னா கூட சுழற்பந்துவீசுவார்கள். இப்போது நம்மிடம் யாரும் அப்படி இல்லை

காரணம்
பேட்ஸ்மேன்களுக்கு குறைந்தபட்சம் சுழற்பந்தவீச தெரிந்து இருந்தாலோ இல்லை வேகப்பந்துவீச தெரிந்து இருந்தாலோ நமக்கு எவ்வித பிரச்சினையும் இல்லை. ஒவ்வொரு அணியிலும் ஆல் ரவுண்டர்கள் அதிகம் உள்ளனர். இந்தியாவில் கடந்த 7 ஆண்டுகளாக அப்படி யாரும் இல்லை. இதனால் தான் இந்தியா தோல்வியை தழுவுகிறது என்று கவாஸ்கர் கூறினார்

உண்மை
கவாஸ்கர் கூறியது முழுக்க முழுக்க உண்மை. அப்போது எல்லாம் பேட்மேன்கள் பெரும்பாலனோர் சுழற்பந்துவீசுவார்கள். இப்போது தவான், ராகுல், கோலி, ரோகித், ஸ்ரேயாஸ் ஐயர், என யாருக்குமே பந்துவீச தெரியாது. ஹர்திக் பாண்டியா, வெங்கடேஷ் ஐயர் போன்ற ஆல் ரவுண்டர்கள் அவசியம் என்றாலும் குறைந்தபட்சம் யுவராஜ், ரெய்னா போன்ற வீரர்களை உருவாக்க புதிய கேப்டன் முயற்சிக்க வேண்டும்.


Click it and Unblock the Notifications