Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இந்திய அணியில் பெரிய பிரச்சினை இது தான்.. சரி செய்யவில்லை என்றால் தோல்வி தான்.. கவாஸ்கர் எச்சரிக்கை

மொஹாலி : ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணி மோசமான தோல்வியை தழுவியுள்ளது.

Recommended Video

T20 Worldcup | Playing XIல ரிஸ்க் எடுத்தாதான் worldcup கிடைக்கும் - Sunil Gavaskar

இது குறித்து பல்வேறு விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில் இந்திய அணியின் தோல்விக்கு முக்கிய காரணத்தை முன்னாள் கேப்டன் கவாஸ்கர் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள அவர், இந்திய அணியின் டெட் பவுலிங் மோசமாக இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

சரியாக பந்துவீசவில்லை

சரியாக பந்துவீசவில்லை

இது தொடர்பாக அவர் அளித்துள்ள பேட்டியில் நேற்று மைதானத்தில் பனிப்பொழிவு இருந்தது போல் தெரியவில்லை. பந்து வீச்சாளர்கள் நேற்றைய ஆட்டத்தில் அவர்களுடைய டவலை பயன்படுத்தவில்லை. ஒரு வேளை பனிப்பொழிவு இருந்தாலும் அதை ஒரு காரணமாக சொல்ல கூடாது. நாம் சரியாகப் பந்து வீசவில்லை என்பதே உண்மை.

19வது ஓவரில் சிக்கல்

19வது ஓவரில் சிக்கல்

எடுத்துக்காட்டாக 19வது ஓவரை எடுத்துக் கொள்ளுங்கள். அது தான் பிரச்சனைக்கு காரணம். புவனேஸ்வர் குமார் போன்ற நட்சத்திர வீரர் நிச்சயம் அணியை காப்பாற்றுவார் என்று நினைக்கும் போதெல்லாம் அவர் ரன்களை வாரி வழங்குகிறார். பாகிஸ்தான், இலங்கை தற்போது ஆஸ்திரேலியா என கடந்த மூன்று ஆட்டங்களில் 19 ஓவரை வீசியுள்ளார்.

புவனேஸ்வர் குமார் ஏமாற்றம்

புவனேஸ்வர் குமார் ஏமாற்றம்

இதில் 18 பந்துகளில் 49 ரன்களை புவனேஸ்வர்குமார் கொடுத்திருக்கிறார். இது ஒரு பந்துக்கு மூன்று ரன்கள் என்ற அளவு ஆகும். புவனேஸ்வர் குமார் போன்ற அனுபவ வீரர் இப்படி ரன்களை கொடுப்பது சரியல்ல. 18 பந்தில் அதிகபட்சமாக நீங்கள் 35, 36 ரன்கள் கொடுக்கலாம்.அதற்கு மேல் செல்லக்கூடாது. இது இந்திய அணியின் மிகப்பெரிய பிரச்சினையாக கருதப்படுகிறது. இந்தியா இதனால் தான் சில ஆண்டுகளாக டி20 போட்டிகளில் தோல்வியை தழுவி வருகிறது .

பும்ராவால் நன்மை

பும்ராவால் நன்மை

பெரிய இலக்கை இந்திய அணி வீரர்களால் தற்காத்துக் கொள்ள முடியவில்லை. ஒருவேளை பும்ரா அணிக்குள் வந்தால் ஆட்டம் தலைக்கீழாக மாற வாய்ப்பு உள்ளது. ஏனெனில் அவர் உங்களுக்கு விக்கெட்டுகளை பெற்றுக் கொடுப்பார். ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அப்படி ஒரு நிலைமை இந்தியாவுக்கு ஏற்படவில்லை இதனால் தான் இந்தியா தோற்றது.

Story first published: Wednesday, September 21, 2022, 14:17 [IST]
Other articles published on Sep 21, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+