Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அந்த வீரர் முச்சதத்தையே அடிப்பார் பாருங்க.. 2022ல் தாக்கத்தை ஏற்படுத்திய வீரர் யார்? கவாஸ்கர் பதில்!

மும்பை: இந்திய அணியின் இளம் வீரர் ஒருவர் 50 ஓவர் கிரிக்கெட்டில் நிச்சயம் முச்சதம் அடிப்பதற்கான அறிய திறமை உள்ளதாக முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் பாராட்டியுள்ளார்.

2022ம் ஆண்டு இந்திய அணிக்கு பல்வேறு ஏற்ற இறக்கங்களுடன் முடிவுக்கு வந்துள்ளது. கடைசி போட்டியான வங்கதேச டெஸ்ட் தொடரை வெற்றிகரமாக முடித்துள்ளது.

ஆனால் இந்தாண்டில் ஆசிய கோப்பை தொடரில் லீக் சுற்றிலேயே வெளியேறியது, டி20 உலகக்கோப்பையில் அரையிறுதியில் வெளியேறியது என சில சொதப்பல்களும் ஏற்பட்டன.

கவனம் ஈர்த்த வீரர்

கவனம் ஈர்த்த வீரர்

இதனையடுத்து இந்தாண்டில் அதிக கவனம் ஈர்த்த இந்திய கிரிக்கெட் வீரர் யார் என்ற விவாதம் சூடுபிடித்துள்ளது. வழக்கமாக ரோகித் சர்மா, பும்ரா, ஹர்திக் பாண்ட்யா போன்றோர் இதில் இடம்பெறும் சூழலில், இந்த முறை சூர்யகுமார் யாதவ், உம்ரான் மாலிக், அர்ஷ்தீப் சிங், இஷான் கிஷான், சுப்மன் கில் போன்ற வீரர்களுக்காக போட்டி நடந்து வருகிறது.

கவாஸ்கர் பதில்

கவாஸ்கர் பதில்

இந்நிலையில் சுனில் கவாஸ்கர் சுவாரஸ்ய கருத்தை முன்வைத்துள்ளார். அதில், இந்தாண்டு இளம் வீரர்கள் பலர் சிறப்பாக விளையாடியதால் எதிர்காலம் பிரகாசமாக உள்ளது. இதில் குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால் இஷான் கிஷானை சொல்லலாம். 50 ஓவர் கிரிக்கெட்டில் அவர் படைத்த சாதனை மிகவும் அறிதான ஒன்றாகும்.

 முச்சதம் உறுதி

முச்சதம் உறுதி

இஷான் கிஷான் வெறும் 35 - 36வது ஓவர்களிலேயே தனது இரட்டை சதத்தை பூர்த்தி செய்துவிட்டார். அவர் மட்டும் தொடர்ந்து சிறப்பாக ஆடியிருந்தால் நிச்சயம் 50 ஓவர் கிரிக்கெட் வரலாற்றில் முதல் முச்சதத்தை அடித்திருப்பார். அந்த அளவிற்கு பேட்டிங் செய்தார். மிகவும் இளம் வயதில் இந்த சாதனைகளை செய்வது இந்திய அணிக்கு மிகப்பெரிய சாதகம் அமையும் என கவாஸ்கர் கூறியுள்ளார்.

உலகக்கோப்பை ப்ளான்

உலகக்கோப்பை ப்ளான்

2023ம் ஆண்டுக்கான 50 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் அடுத்த அக்டோபர் மாதம் நடைபெறும் எனத்தெரிகிறது. இதற்காக தயாராகும் இந்திய அணியில் இஷான் கிஷான், சூர்யகுமார் யாதவ் போன்றும் பெரிய திட்டமாக இருப்பார்கள் எனத்தெரிகிறது. எனவே அதற்கு முதற்படியாக ஜனவரியில் நடக்கும் இலங்கையுடனான தொடரில் வாய்ப்பு பெறவுள்ளனர் எனக்கூறப்படுகிறது.

Story first published: Tuesday, December 27, 2022, 19:03 [IST]
Other articles published on Dec 27, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+