Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

WTC Final: சும்மா புலம்பாதீங்க.. வெற்றி இந்தியாவுக்கே - சுனில் கவாஸ்கர் நெத்தியடி "பன்ச்"

சவுத்தாம்ப்டன்: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கான ஒரு அட்டகாசமான பாயிண்ட்டை முன்வைத்துள்ளார் சுனில் கவாஸ்கர்.

இதோ.. இன்னும் மூன்றே நாட்களில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி தொடங்குகிறது. இந்திய அணி முழு வீச்சில் மோதலுக்கு தயாராகி வருகிறது.

வீரர்களுக்குள் நடந்த இன்ட்ரா ஸ்குவாட் கிரிக்கெட் போட்டியில், ரிஷப் பண்ட் சதம் விளாச, ஷுப்மன் கில், ரவீந்திர ஜடேஜா ஆகியோர் அரைசதம் அடிக்க, இந்திய அணி நம்பிக்கையோடு இறுதிப் போட்டியை எதிர்நோக்கி காத்திருக்கிறது.

பசியுடன் இந்திய அணி

பசியுடன் இந்திய அணி

இந்நிலையில், டைம்ஸ் ஆஃப் இந்தியாவுக்கு சுனில் கவாஸ்கர் அளித்துள்ள பேட்டியில், "உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இரு அணிகளும் சரிசமமான பலத்துடன் உள்ளன. இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை 1-0 என்று வென்றுவிட்டதால், நியூசிலாந்துக்கு தான் வெற்றிவாய்ப்பு அதிகம் என்று நினைத்துக் கொண்டிருக்கின்றனர். ஆனால், ஒரு மாதத்திற்கும் மேலாக எந்தவித கிரிக்கெட் போட்டியும் இன்றி பசியுடன் காத்திருக்கிறது இந்திய படை.

வேட்டையாட ரெடி

வேட்டையாட ரெடி

அப்படிப்பட்ட வேட்கையும் இருக்கும் இந்திய அணி புத்துணர்ச்சியுடன் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் களமிறங்கவுள்ளது. அதுமட்டுமல்ல, பேட்டிங், பவுலிங் என இரண்டிலும் தாக்கம் ஏற்படுத்தக் கூடிய வீரர்கள் இருப்பதால், அவர்கள் நிச்சயம் இந்திய அணிக்கு வெற்றியை பெற்றுத் தருவார்கள்" என்று கூறியுள்ளார்.

ஏங்கும் வீரர்கள்

ஏங்கும் வீரர்கள்

உண்மையில், சுனில் கவாஸ்கர் கூறுவது நூற்றுக்கு நூறு உண்மை எனலாம். குறிப்பாக, அவர் கூறியிருக்கும் 'பசி' எனும் வார்த்தை மிக முக்கியமான அனலைசிஸ் எனலாம். அதாவது, கடந்த ஒரு மாதமாகவே இந்திய வீரர்கள் கடுமையான குவாரண்டைனில் இருந்து வந்தனர். இந்தியாவில் 14 நாட்கள், இங்கிலாந்தில் 10 நாட்கள் என்று அறைகளிலேயே முடங்கியிருக்க வேண்டிய நிலை. இதனால், எப்போது கிரிக்கெட் களத்தில் இறங்குவோம் என்று ஒவ்வொரு வீரர்களும் ஏங்கும் நிலைக்கு தள்ளப்பட்டனர்.

அசுரத்தனம்

அசுரத்தனம்

உளவியல் ரீதியாக இது ஒரு முக்கியமான காரணியாக பார்க்கலாம். ஸோ, இவ்வளவு நாட்களாக ஓய்வில் இருந்து சேமித்து வைத்திருந்த ஆற்றலை, அவர்கள் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் அப்படியே வெளிக்காட்டுவார்கள். பவுலிங்கில் அசுரத்தனம் இருக்கும். பேட்டிங்கில் மட்டும் நிறுத்தி நிதானமாக தாக்குப்பிடித்துவிட்டால், நியூசிலாந்தை வீழ்த்திவிடலாம் என்பதே யதார்த்தம்.

Story first published: Tuesday, June 15, 2021, 19:35 [IST]
Other articles published on Jun 15, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+