
சூர்யகுமார் யாதவின் அதிரடி
இந்த தொடரில் இந்திய அணி சரிவு பாதைக்கு செல்லும் போதெல்லாம் காப்பாற்றுவது ஒருபுறம் விராட் கோலியாக இருந்தாலும், மற்றொருபுறம் சூர்யகுமார் யாதவும் முக்கிய பங்கு வகிக்கிறார். மிஸ்டர் 360 டிகிரியாக பார்க்கப்படும் அவர், டி20 கிரிக்கெட்டில் ஒரே ஆண்டில் 1000 ரன்களை கடந்த இந்தியர் என்ற பெருமையை பெற்றுள்ளார். மேலும் நடப்பு தொடரில் 3 அரைசதங்களை விளாசி யாராலும் அசைக்க முடியாத ஃபார்மில் இருக்கிறார்.

கவாஸ்கர் பாராட்டு கவாஸ்கர் புகழாரம்
இந்நிலையில் இவரின் தேவை குறித்து சுனில் கவாஸ்கர் பேசியுள்ளார். அதில், இந்திய அணியின் ஸ்கோர் டிஃபண்ட் செய்யக்கூடிய அளவிற்கு கொண்டு செல்வது சூர்யகுமார் யாதவாக இருக்கிறார். ஜிம்பாப்வே போட்டியில் சூர்யகுமார் மட்டும் 25 பந்துகளில் 61 ரன்களை அடிக்கவில்லை என்றால் இந்தியாவின் ஸ்கோர் 150 கூட வந்திருக்காது.

ஆச்சரியம் தந்த ஷாட்
ஜிம்பாப்வே போட்டியில் அவர் அடித்த ஒரு ஷாட் ஆச்சரியமாக உள்ளது. விக்கெட் கீப்பருக்கு அருகிலேயே ஒரு பந்தை திருப்பி அடிப்பது சாதாரணம் அல்ல. பந்து எந்த பகுதிக்கு வருகிறது என்பதை சரியாக கணித்து, அதன் ஆங்கிளுக்கு ஏற்ற வகையில் திருப்பி விடுகிறார். அவரின் ஷாட்கள் புத்தகத்தில் புதிதாக இடம்பெறுகிறது. ஸ்ட்ரைட் ட்ரைவை கூட வித்தியாசமாக ஆடுகிறார். உண்மையில் புதிய மிஸ்டர் 360 தான் என கவாஸ்கர் கூறியுள்ளார்.

அதிக ரன்கள்
இந்த டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் அதிக ரன்களை அடித்தவர்கள் பட்டியலில் சூர்யகுமார் யாதவ் 3வது இடத்தில் உள்ளார். 5 இன்னிங்ஸ்களில் ஆடி 225 ரன்களை அடித்துள்ளார். இதில் 3 அரைசதங்கள் அடங்கும். முதலிடத்தில் இந்திய வீரர் விராட் கோலி 246 ரன்களுடன் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications