Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

“10 விக்கெட் கன்ஃபார்ம்”.. இந்திய பவுலருக்கு இருக்கும் மெகா வாய்ப்பு.. அடித்துக்கூறும் கவாஸ்கர்!

மும்பை: இலங்கை அணிக்கு எதிரான முதல் டெஸ்டில் இந்திய பவுலர் ஒருவர் ஆச்சரியத்தில் ஆழ்த்தவுள்ளதாக சுனில் கவாஸ்கர் கணித்துள்ளார்.

இரு அணிகளும் மோதும் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நாளை மொஹாலியில் தொடங்கவுள்ளது.

கடைசியாக விளையாடிய தென்னாப்பிரிக்க தொடரில் தோல்வியடைந்ததால், இதில் வெற்றி பெற இந்திய அணி வீரர்கள் தீவிரமாக தயாராகி வருகின்றனார்.

முதல் டெஸ்ட் போட்டி

முதல் டெஸ்ட் போட்டி

இந்த முறை சீனியர் வீரர்களான ஜஸ்பிரித் பும்ரா, முகமது ஷமி, ரிஷப் பண்ட் ஆகியோர் மீண்டும் அணிக்குள் இணைந்துள்ளனர். இந்த மூவர் கூட்டணி தான் ப்ளேயிங் 11லும் இடம் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் பும்ராவுக்கு இந்த போட்டியில் சர்ஃப்ரைஸ் காத்துள்ளதாக கவாஸ்கர் கூறியுள்ளார்.

கவாஸ்கரின் கருத்து

கவாஸ்கரின் கருத்து

இதுகுறித்து பேசிய அவர், இலங்கைக்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பும்ரா இரண்டு முறையாவது 5 விக்கெட் ஹவுல் எடுப்பார் என நம்பிக்கை உள்ளது. இதில் ஆச்சரியப்படுவதற்கு இடமே இல்லை. ஏனென்றால் அந்த களத்தின் தன்மை அப்படி இருக்கும் குறிப்பாக பும்ராவின் திறமை மிகவும் அற்புதமானது.

என்ன காரணம்

என்ன காரணம்

ஆட்டத்தின் தொடக்கத்திலேயே அவர் உங்களுக்கு விக்கெட்களை எடுத்துக்கொடுப்பார். ஆட்டத்தின் முக்கியமான கட்டங்களிலும் எடுத்துக்கொடுக்கக்கூடியவர். எனவே இந்த காரணங்களும், பிட்ச்- தன்மையையும் வைத்து தான் அவர் 2 முறை 5 விக்கெட் ஹவுல் எடுக்க வாய்ப்புள்ளது எனக்கூறுகிறேன் என கவாஸ்கர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

புள்ளிவிவரங்கள்

புள்ளிவிவரங்கள்

வரலாற்றில் இந்திய மண்ணில் இதுவரை ஒரு முறை கூட இந்திய அணி வென்றதே கிடையாது. இதுவரை இந்தியாவில் நடைபெற்றுள்ள 20 போட்டிகளில் இந்திய அணி 11 முறை வெற்றி பெற்றுள்ளது. மீதமுள்ள 9 போட்டிகள் சமனில் முடிவடைந்துள்ளது. எனவே வரலாற்றை மாற்றி அமைக்க இலங்கை முணைப்பு காட்டுகிறது.

Story first published: Friday, March 4, 2022, 17:03 [IST]
Other articles published on Mar 4, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+