Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

“ரோகித் பதில் சொல்லியே தீர வேண்டும்”.. முதல் டி20-ல் தேவையின்றி செய்த மாற்றம்.. கவாஸ்கர் காட்டம்!

மொஹாலி: இந்திய கேப்டன் ரோகித் சர்மா எடுத்த ஒரு மோசமான முடிவு குறித்து விளக்கியே தீர வேண்டும் என கவாஸ்கர் காட்டமாக தெரிவித்துள்ளார்.

ஆஸ்திரேலிய அணியுடனான முதல் டி20 போட்டியில் இந்திய அணி 209 ரன்களை இலக்காக நிர்ணயித்தும் தோல்வியடைந்தது.

இந்தியாவின் இந்த தோல்விக்கு இந்திய பவுலர்களின் மோசமான பவுலிங்கே காரணமாக இருந்தது.

பவுலிங் சொதப்பல்

பவுலிங் சொதப்பல்

முதல் டி20 கிரிக்கெட் போட்டிக்கான இந்திய பவுலிங் படையில் காயம் காரணமாக ஜஸ்பிரித் பும்ரா விலகியதை ஏற்றுக்கொண்ட போதும், அவருக்கு மாற்று வீரராக உமேஷ் யாதவ் கொண்டு வரப்பட்டது தான் ஆச்சரியமாக இருந்தது. ஏனென்றால் அணியில் ஏற்கனவே தீபக் சஹார் தயார் நிலையில் இருந்தார்.

தீபக் சஹார்

தீபக் சஹார்

டி20 உலகக்கோப்பைக்கான திட்டத்தில் தீபக் சஹார் தான் உள்ளார். ஸ்டேண்ட் பை வீரராக சேர்க்கப்பட்டிருக்கிறார். காயத்தில் இருந்து மீண்டு வந்த அவர் தயாராகி கொள்வதற்காகவே ஆஸ்திரேலிய தொடரில் வாய்ப்பு கொடுக்கப்பட்டது. ஆனால் அவரை ஒதுக்கிவிட்டு எந்தவித திட்டத்திலுமே இல்லாத உமேஷ் யாதவ் ஏன் களமிறக்கப்பட்டார் என்பது யாருக்குமே புரியவில்லை.

சுனில் கவாஸ்கர் கேள்வி

சுனில் கவாஸ்கர் கேள்வி

இந்நிலையில் இதுகுறித்து கவாஸ்கரும் கேள்வி எழுப்பியுள்ளார். அதில், ரிசர்வ் வீரராக கூட தேர்வாக உமேஷ் யாதவ் ஏன் கொண்டு வரப்பட்டார் என்பதை அடுத்த செய்தியாளர் சந்திப்பில் ரோகித் விளக்கியே தீர வேண்டும். தீபக் சஹார் காயத்தில் இருந்து மீண்டு வந்துள்ளார். டி20 உலகக்கோப்பை போன்ற பெரிய தொடர்களில் பேக் அப்பிற்கு சிறந்த ஃபார்மில் வீரர்கள் வேண்டும். அந்தவகையில் தீபக் சஹார் தயாராக வேண்டும் அல்லவா??

யாருமே இருக்கமாட்டார்கள்

யாருமே இருக்கமாட்டார்கள்

இப்படி ஆஸ்திரேலிய தொடரிலும் தீபக் சஹார் ஒதுக்கப்பட்டால், யாரேனும் ஒருவருக்கு காயம் ஏற்பட்டால் கூட மாற்று வீரர்கள் இருக்க மாட்டார்கள். அவருக்கு என்ன ஆனது? ஏன் முதல் டி20ல் வெளியேற்றப்பட்டார் என்பது குறித்து ரோகித் சர்மா விளக்கம் தர வேண்டும் என கவாஸ்கர் கூறியுள்ளார்.

Story first published: Thursday, September 22, 2022, 18:17 [IST]
Other articles published on Sep 22, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+