பிரதமரை சந்திக்க மறுத்த கவாஸ்கர்.. காரணம் சொன்னாரு பாருங்க.. என்ன நடந்தது?
மும்பை: இந்திய தேசத்தின் பிரதமர் உங்களை சந்திக்க விரும்புகிறார் என்று யாராவது சொன்னால் நீங்கள் என்ன செய்வீர்கள்? உடனே அதற்காக தயாராகி பிரதமரை வரவேற்பீர்கள். ஆனால் கவாஸ்கர் பிரதமரை சந்திக்க தமக்கு நேரமில்லை என்று கூறி அதிர்ச்சியை ஏற்படுத்திருக்கின்றார்.
ஆனால் அதற்கான பின் விளைவுகள் எதையும் அவர் சந்திக்கவில்லை. ஏனென்றால் இந்த சம்பவம் இப்போது நடந்தது கிடையாது. முன்னாள் கிரிக்கெட் வீரர் கர்ஷன் கார்வி அளித்த பேட்டியில் தான் இந்த சம்பவம் குறித்து தெரிய வந்திருக்கிறது.

டெல்லியில் நடைபெற்ற டெஸ்ட் போட்டி ஒன்றில் கவாஸ்கர் பேட்டிங் செய்வதற்காக தயாராகிக் கொண்டிருந்தார். அப்போது அணியின் மேலாளர் ராஜாசிங், பிரதமர் மொரார்ஜி தேசாய் வீரர்களை சந்திக்க ஆசைப்படுவதாக அவர் தெரிவித்தார். இதனால் வீரர்கள் அனைவரும் மைதானத்திற்கு வருமாறு மேலாளர் கூறியிருக்கிறார். மொரார்ஜி தேசாய் வருவதற்கு பத்து நிமிடம் தாமதமானதால் டாஸ் வீசப்பட்டு இந்தியா பேட்டிங் செய்ய இருந்தது.
இதனால் பேட்டிங்கிற்கு தயாரான கவாஸ்கர் தான் தனியாக அமர்ந்து என்னுடைய பேட்டிங் குறித்து கவனம் செலுத்தப் போகிறேன். இதனால் பிரதமரை சந்திக்க தமக்கு நேரமில்லை என்று கூறிவிட்டார். வீரர்கள் பலரும் அவரை வற்புறுத்தியும் கவாஸ்கர் என்னை விட்டு விடுங்கள்.பேட்டிங் தான் முக்கியம் என கூறிவிட்டார். இதனை அடுத்து நாங்கள் அனைவரும் பிரதமர் மொரார்ஜி தேசாய் சந்தித்து வாழ்த்து பெற்றோம்.
ஆனால் கடைசி வரை கவாஸ்கர் வரவில்லை. அதன் பிறகு தான் எங்களுக்கு தெரிந்தது மொரார்ஜி தேசாய் கவாஸ்கரை பார்க்க தான் மைதானத்திற்கே வந்தார் என்று. அந்த அளவிற்கு ஆதிக்கம் செலுத்தும் நபராக கவாஸ்கர் இருந்தார். அதேபோன்று 1975 உலகக் கோப்பை போட்டியின் போது கவாஸ்கர் 60 ஓவர்கள் போட்டியில் இங்கிலாந்து நிர்ணயித்த 334 என்ற இலக்கை துரத்தியபோது 174 பந்துகளை எதிர் கொண்டு வெறும் 36 ரன்கள் மட்டுமே சேர்த்தார்.
இது டிரெஸ்ஸிங் ரூமில் இருந்த பலருக்கும் பிடிக்கவில்லை. பலரும் கவாஸ்கரை வேகமாக ஆட சொல்லி ட்ரெஸ்ஸிங் ரூமில் இருந்து மெசேஜ் அனுப்பினோம். ஆனால் அவர் முடியாது என்று கூறிவிட்டார். இது பற்றி அணி மேலாளர் கேள்வி கேட்டவுடன், நான் அடுத்து வரும் டெஸ்ட் போட்டிக்கு தயாராக இந்த போட்டியை பயன்படுத்திக் கொண்டேன். இதை தவிர வேறு யாரும் என்னிடம் எதுவும் கேட்கக் கூடாது. என்னை தனியாக விடுங்கள் என்று கவாஸ்கர் கூறிவிட்டு சென்றதாக கவாரி கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications