Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

“கண்டிப்பா இது நடக்கும்”.. இங்கிலாந்து டெஸ்ட் தொடரின் வெற்றிவாய்ப்பு.. அடித்துக்கூறும் ஜாம்பவான் !

மும்பை: இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடர் குறித்து முன்னாள் வீரர் கவாஸ்கர் கணித்துள்ளார்.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடருக்காக இந்திய அணி தற்போது இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது.

இதற்காக 24 பேர் கொண்ட இந்திய அணி நேற்று தனி விமானம் மூலம் இங்கிலாந்து சென்றடைந்தது.

சுற்றுப்பயணம்

சுற்றுப்பயணம்

இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி ஜூன் 18ம் தேதி ரோஸ் பவுல் மைதானத்தில் நடைபெறுகிறது. இது முடிந்த பிறகு இந்திய அணி இங்கிலாந்துடன் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. இந்த தொடர் ஆக.4 முதல் செப்.14ம் தேதி வரை நடைபெறுகிறது.

இங்கிலாந்து தொடர்

இங்கிலாந்து தொடர்

இங்கிலாந்து சமீபத்தில் தான் இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு படுதோல்வியுடன் திரும்பி சென்றது. 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 3 -1 என்ற கணக்கில் இங்கிலாந்தை வீழ்த்தி அசத்தியது. அதே போல டி20 தொடர் மற்றும் ஒருநாள் போட்டி தொடரிலும் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. இந்நிலையில் இந்த தோல்விக்கு வரவிருக்கும் டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து பழிவாங்கும் நோக்குடன் உள்ளது.

கவாஸ்கர்

கவாஸ்கர்

இந்நிலையில் இந்த முறை இங்கிலாந்து அணியை அதன் மண்ணிலேயே இந்தியா வீழ்த்தும் என முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசியுள்ள அவர், டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு பிறகு இங்கிலாந்து டெஸ்டுக்கு 6 வாரங்களுக்கு மேல் கால நேரம் உள்ளது. எனவே அந்த ஒரு போட்டியின் முடிவு, இங்கிலாந்து தொடரை எந்த வகையிலும் பாதிக்காது. இந்திய அணி கண்டிப்பாக 4 - 0 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரை வெல்லும்.

இங்கிலாந்து பிட்ச்

இங்கிலாந்து பிட்ச்

இங்கிலாந்து அணியின் இந்திய சுற்றுப்பயணம் வந்தபோது, பிட்ச்சானது ஸ்பின்னர்களுக்கு சாதகமாய் இருந்தது. இந்த முறை இங்கிலாந்து களத்தில் ஓரளவுக்கு புற்கள் இருப்பதாய் அமைக்கப்பட்டால் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. அது மீண்டும் இங்கிலாந்து பேட்ஸ்மேன்களுக்கு அச்சுறுத்தலை கொடுக்கும் எனத்தெரிவித்துள்ளார்.

Story first published: Friday, June 4, 2021, 21:09 [IST]
Other articles published on Jun 4, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+