“விராட் கோலி செய்ததை மறக்கவே முடியாது”.. வங்கதேச வீரருடனான சண்டை.. கவாஸ்கர் முக்கிய கருத்து!
டாக்கா: வங்கதேச அணியுடனான டெஸ்ட் தொடரில் இந்திய வீரர் விராட் கோலி செய்த விஷயத்தை யாராலும் அவ்வளவு எளிதாக மறந்துவிட முடியாது என சுனில் கவாஸ்கர் கூறியுள்ளார்.
இந்திய - வங்கதேச அணிகளுக்கு இடையேயான 2வது டெஸ்ட் போட்டி இன்று நிறைவடைந்தது. இதில் இந்திய அணி 3 விக்கெட்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது.
இதன் மூலம் 2 போட்டிகள் கொண்ட தொடரை இந்திய அணி ஒயிட் வாஷ் செய்தது. மேலும் வங்கதேசத்துடன் டெஸ்ட் கிரிக்கெட்டில் தோற்றதே இல்லை என்ற பெருமையையும் தக்கவைத்துக்கொண்டது.

கோலி மீதான புகார்
இந்திய அணி வெற்றி பெற்ற போதும், இந்திய சீனியர் வீரர் விராட் கோலி செய்த ஒரு விஷயம் மட்டும் சரியா? தவறா? என்ற விவாதம் மட்டும் சமூக வலைதளங்களில் வெடித்து வருகிறது. 2வது டெஸ்ட் போட்டியின் போது வங்கதேச பவுலர் தைஜுல் இஸ்லாம் சீண்ட, பதிலுக்கு அவர் ஆக்ரோஷமாக வார்த்தைகளை விட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

என்ன நடந்தது
விராட் கோலி 22 பந்துகளை சந்தித்து வெறும் ஒரு ரன்னை மட்டுமே எடுத்திருந்த போது மெஹிடி ஹாசன் மிராஸ் பந்துவீச்சில் துரதிஷ்டவசமாக அவுட்டானார்.
கோலி அவுட்டானவுடன் வங்கதேச பவுலர் தைஜுல் இஸ்லாம், அவர் குறித்து ஏதோ கிண்டலடிக்கும் வகையில் கூறினார். இதனைக்கேட்டு ஆத்திரமடைந்த விராட் கோலி, தைஜுல் இஸ்லாமிடம் நெருங்கி எதுவாக இருந்தாலும் முகத்திற்கு நேராக சொல் பார்க்கலாம் என கடுமையான வார்த்தைகளில் கூறி சண்டையிட்டார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

கவாஸ்கர் விளக்கம்
இந்நிலையில் இதுகுறித்து கவாஸ்கர் பேசியுள்ளார். அதில், முதல் டெஸ்ட் போட்டியின் போது லிட்டன் தாஸ் தனது காதில் கைவைத்து செய்கை காட்டியதால் பிரச்சினை ஏற்பட்டது. அதன்பின்னர் அவர் அவுட்டான பிறகு கோலி மற்றும் சிராஜ் ஆகியோர் அதனை திருப்பிக்கொடுத்தனர். இதற்கு காரணம், வங்கதேசத்தில் நன்கு ரன் அடித்து வந்தவர் லிட்டன் தாஸ் தான். எனவே அவரின் விக்கெட்டை அப்படி கொண்டாடினர்.

மறக்க மாட்டார்கள்
அதே போல தானே வங்கதேச வீரர்களுக்கும் இருக்கும். விராட் கோலி உலகின் சிறந்த பேட்ஸ்மேன் ஆகும். அவரின் விக்கெட்டை எடுத்ததாலும், முதல் டெஸ்டில் நடந்த சம்பவத்திற்காகவும் அப்படி செய்தார்கள். அன்று நடந்ததை அவ்வளவு சுலபமாக மறந்துவிட மாட்டார்கள். அதனால் தான் இன்று இதனை செய்துள்ளனர் என கோலி அவசரப்பட்டிருக்க வேண்டாம் என்பது போல கவாஸ்கர் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications