For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

"இருக்கிறதை விட்டுட்டு பறக்க ஆசைப்பட்ட இங்கிலாந்து" - தோல்வி காரணம் குறித்து சுனில் கவாஸ்கர்

லண்டன்: இந்தியாவை குறைத்து மதிப்பிட்டதே இங்கிலாந்தின் சரிவுக்கு காரணம் என்று சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்துக்கு எதிரான பரபரப்பான நான்காவது டெஸ்ட் போட்டியின் கடைசி நாள் ஆட்டத்தில், இந்தியா அபார வெற்றிப் பெற்றது.

இந்தியா நிர்ணயித்த 368 ரன்கள் இலக்கை துரத்திய இங்கிலாந்து, 210 ரன்களுக்கு அல் அவுட்டாக, இந்தியா 158 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.

இதன் மூலம், ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், இந்தியா 2-1 என்று முன்னிலையில் உள்ளது. ஸோ, இங்கிலாந்து இந்த தொடரை வெல்வதற்கான வாய்ப்பின் கதவு இழுத்து மூடப்பட்டுள்ளது. ஒருவேளை, நாளை மறுதினம் (செப்.10) மான்செஸ்டரில் தொடங்கவுள்ள கடைசி டெஸ்ட் போட்டியில், இங்கிலாந்து வெற்றிப் பெற்றால் தொடரை 2-2 என்று சமன் செய்ய முடியும். ஆனால், இந்தியா வெற்றிப் பெற்றுவிட்டால் 2007ம் ஆண்டுக்கு பிறகு இங்கிலாந்து மண்ணில், இந்திய அணி மீண்டும் டெஸ்ட் தொடரை வெல்லும். அதுவும் 3-1 என்று இங்கிலாந்து அணியை டாமினேட் செய்து வெல்லும் முதல் ஆசிய அணி என்று பெருமையை இந்தியா பெறும்.

sunil gavaskar said England underestimated virat kohli led indian team

இந்நிலையில், இங்கிலாந்து அணி இந்தியாவை குறைத்து மதிப்பிட்டுவிட்டதாக சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் அளித்துள்ள பேட்டியில், ""மான்செஸ்டரில் நடக்கவுள்ள ஐந்தாவது டெஸ்டில் இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட்-க்கு அதிக அழுத்தம் இருக்கும், ஏனென்றால் உளவியல் ரீதியாக 2-1 என்ற அட்வான்டேஜோடு இந்திய அணி களமிறங்கும். இங்கிலாந்து அணி மற்றும் அந்நாட்டின் ஊடகத்தின் மற்றொரு பெரிய தவறு என்னவென்றால், அவர்கள் ஆஷஸ் தொடரைப் பற்றியும் அவர்கள் அந்தத் தொடரில் எப்படி விளையாட விரும்புகிறார்கள் என்பதைப் பற்றியுமே பேசிக் கொண்டிருந்தார்கள். அதற்கு பதிலாக இந்தியாவின் தற்போதைய சவால் குறித்து அவர்கள் கவனம் செலுத்தியிருக்க வேண்டும். இங்கிலாந்து இந்திய அணியைக் குறைத்து மதிப்பிட்டுவிட்டது. அதன் விளைவு.. இந்த தொடரையயே வெல்ல முடியாத சூழலுக்கு அந்த அணி தள்ளப்பட்டுவிட்டது.

இந்தியா தனது இரண்டாவது இன்னிங்சில் 380 ரன்களை மட்டுமே எடுத்திருந்தால், இங்கிலாந்து சுமார் 280 ரன்களை மட்டுமே சேஸ் செய்ய நேரிட்டிருக்கும். 368 எனும் டார்கெட்டோடு ஒப்பிடுகையில், 280 எனும் டார்கெட் சற்று இலகுவாக இருந்திருக்கும். லார்ட்ஸிலும் சேஸிங்கில் சொதப்பினார்கள். இப்போதும் சொதப்பியுள்ளார்கள். லோ ஆர்டரில் பந்துவீச்சாளர்கள் சில ரன்களை எடுக்கும்போது, அடுத்த இன்னிங்ஸில் அவர்கள் மீண்டும் பந்துவீச வரும்போது கூட அவர்களின் நம்பிக்கை உயர்த்திருக்கும். கான்ஃபிடனஸ் லெவல் அதிகரித்திருக்கும். 50 ஆண்டுகளுக்குப் பிறகு ஓவல் மைதானத்தில் இந்தியா ஒரு டெஸ்ட் போட்டியில் வென்றதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்" என்று சுனில் கவாஸ்கர் கூறியுள்ளார்.

sunil gavaskar said England underestimated virat kohli led indian team

இங்கிலாந்து ஆஷஸ் தொடரில் மட்டும் கவனம் செலுத்தியதால், இந்தியாவுக்கு எதிரான தொடரை வெல்ல முடியாத நிலைக்கு தள்ளப்பட்டதா என்று தெரியாது. ஆனால், இந்தியாவை அவர்கள் குறைத்து மதிப்பிட்டுவிட்டனர் என்ற கவாஸ்கரின் வாக்கியம் 100 சதவிகிதம் உண்மையானது. ஆம்! அவர்கள் இந்திய டெஸ்ட் அணியை குறைத்து மதிப்பிட்டிருந்தனர். ஏன்.. நாமே அப்படித்தான் குறைத்து மதிப்பிட்டிருந்தோம். காரணம், தொடக்க வீரர்கள் ஷுப்மன் கில் காரணமாக அணியில் இருந்து வெளியேற வேண்டிய சூழல், மாயங்க் அகர்வால் காயம் காரணமாக விளையாடாத முடியாத நிலை, இதனால் கடைசி வாய்ப்பாக லோகேஷ் ராகுலுக்கு அணியில் இடம் என்று ஓப்பனிங்கிலேயே இந்திய அணி தடுமாறியது. ரோஹித் மீதும் பெரியளவில் எதிர்பார்ப்பில்லை. மிடில் ஆர்டர் மீதும் நம்பிக்கை இல்லாமல் இருந்தது. காரணம், புஜாரா ,கோலி, ரஹானேவின் தொடர் சொதப்பல்.

இப்படி ஏகப்பட்ட குறைகளுடன் களமிறங்கியதால், இந்திய ரசிகர்களே கோலி டீம் இவ்வளவு தூரம் முன்னேறி வரும் என்று எதிர்பார்க்கவில்லை. ஆனால், இந்திய அணி காட்டிய இன்டென்ட் அபாரமானது. 3வது போட்டியில், இன்னிங்ஸ் தோல்வி அடைந்தும், மீண்டு வந்து நான்காவது போட்டியில் வெற்றிப் பெற்றது என்பது மிகப்பெரிய விஷயம். ஏனெனில், போட்டி இந்தியாவில் நடைபெறவில்லை. இங்கிலாந்தில் நடைபெற்றது. அங்கு ஒரு மோசமான தோல்விக்கு பிறகு, இங்கிலாந்து வீழ்த்துவதற்கு அளவுக்கடந்த ஆற்றல் வேண்டும். போராட்டம் வேண்டும். வெறித்தனம் இருக்கணும். விராட் கோலி தலைமையில் அந்த வகையில் சாதித்துவிட்டது. தொடரை முழுமையாக கைப்பற்ற இன்னும் ஒரேயொரு போட்டி மட்டுமே பாக்கி.

Story first published: Wednesday, September 8, 2021, 16:57 [IST]
Other articles published on Sep 8, 2021
English summary
sunil gavaskar said England underestimated india - கவாஸ்கர்
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+