For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

இம்முறை சாக்கு போக்கு சொல்ல முடியாது.. இந்தியாவுக்கு எச்சரிக்கை கொடுத்த கவாஸ்கர்..அப்படி என்ன ஆச்சு?

மெல்போர்ன் : டி20 உலக கோப்பை தொடரில் இம்முறை இந்திய அணி தோற்றால் எவ்வித சாக்குப் போக்கையும் சொல்ல முடியாது என்று சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.

இந்திய அணி கடைசியாக டி20 உலக கோப்பையை 2007 ஆம் ஆண்டு வென்றது.
2013 ஆம் ஆண்டு பிறகு இந்திய அணி ஒருமுறை கூட ஐசிசி தொடரை வென்றதில்லை.

இந்திய அணி கடந்த எட்டு ஆண்டுகளாக தோல்வியை தழுவிய நிலையில் அதற்கு பல காரணங்கள் சொல்லப்பட்டது.அதில் முக்கிய காரணம் ஐசிசி தொடருக்கு தயாராகும் வகையில் இந்திய அணிக்கு போதிய நேரம் இல்லை என்று கூறப்பட்டது.

3 வாரம் பயிற்சி

3 வாரம் பயிற்சி

இந்த நிலையில் செய்தியாளரிடம் பேசிய சுனில் கவாஸ்கர் இம்முறை எங்களை தயார்படுத்திக் கொள்ள வாய்ப்பு அமையவில்லை என்ற காரணத்தை இந்திய அணி சொல்லவே முடியாது. ஏனென்றால் ஆஸ்திரேலியாவுக்கு மூன்று வாரத்திற்கு முன்பாகவே இந்திய அணி வந்து பயிற்சி செய்து வந்துள்ளனர்.மேலும் பயிற்சி ஆட்டத்தில் நல்ல பலமான அணிகளை எதிர்கொண்டு தங்களை தயார் படுத்திக் கொண்டுள்ளனர்.

சிறப்பான தயாரிப்பு பணி

சிறப்பான தயாரிப்பு பணி

அந்த காலத்தில் ஒரு பழமொழி கூறுவார்கள். எதற்காகவும் உன்னை நீ தயார்படுத்திக் கொள்ளவில்லை என்றால் தோல்வி அடைய உன்னை தயார்படுத்திக் கொள் என்று சொல்வார்கள். ஆனால் இம்முறை இந்த பழமொழி இந்திய அணிக்கு ஒத்து வராது. ஏனென்றால் ஆஸ்திரேலியாவில் பயிற்சி ஆட்டத்தில் பங்கேற்பதற்கு முன்பு இந்திய அணி தனது சொந்த மண்ணில் ஆறு டி20 போட்டிகளில் விளையாடி நான்கு போட்டிகளை வென்றிருக்கிறது.

ஐசிசி தொடரில் சொதப்பல்

ஐசிசி தொடரில் சொதப்பல்

இந்திய அணி இருதரப்பு தொடர்களில் எல்லாம் சிறப்பாக செயல்படுகிறது. அது சொந்த மண்ணில் நடந்தாலும் சரி அந்நிய மண்ணில் நடந்தாலும் சரி.ஆனால் ஐசிசி போன்ற பல அணிகள் பங்கேற்கும் தொடரில் தொடர்ந்து சொதப்பி வருகிறது. அதற்கு காரணம் அப்போது போதிய பயிற்சி இல்லாமல் இந்திய அணி வீரர்கள் விளையாடுவார்கள். ஆனால் இம்முறை அப்படி அல்ல.

இந்தியா மீது எதிர்பார்ப்பு

இந்தியா மீது எதிர்பார்ப்பு

இந்திய அணியில் அனுபவமும் இளமையும் வாய்ந்த வீரர்கள் கலந்த கலவையாக இருக்கிறார்கள். இம்முறை உலகக் கோப்பை இந்தியாவுக்கு திரும்பி வரும் என ரசிகர்களிடையே நம்பிக்கை நிலவுகிறது. பும்ரா, ஜடேஜா ஆகியோர் இல்லாத நிலையிலும் இந்தியா டி20 உலக கோப்பையை வெல்ல வாய்ப்பு இருப்பதாக அனைவரும் எதிர்பார்க்கின்றனர் என்று சுனில் கவாஸ்கர் கூறியுள்ளார்.

Story first published: Thursday, October 20, 2022, 16:51 [IST]
Other articles published on Oct 20, 2022
English summary
sunil Gavaskar says India prepared very well for the t20 game
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+