Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

கடந்த 10 ஆண்டுகள்ல ஒருநாள் போட்டிகள்ல இவர்தான் பெஸ்ட்... பாராட்டித் தள்ளிய கவாஸ்கர்!

டெல்லி : கடந்த 10 ஆண்டுகளில் ஒருநாள் போட்டிகளில் கேப்டன் விராட் கோலிதான் இந்திய அணியில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.

குறிப்பாக இந்திய அணியின் சேஸிங்கில் கோலியின் நிலையான செயல்பாடுகள் அவரை சிறப்பாக ஆக்கியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

விராட் கோலி இதுவரை ஒருநாள் போட்டிகளில் 43 சதங்களை அடித்துள்ள நிலையில் 26 சதங்கள் சேஸிங்கின் மூலம் மட்டுமே பூர்த்தி செய்துள்ளார்.

43 சதங்கள்

43 சதங்கள்

ஒருநாள் போட்டிகளில் கேப்டன் விராட் கோலியின் செயல்பாடுகள் மிகவும் சிறப்பானதாக உள்ளது. தற்போது வெளியிடப்பட்டுள்ள ஐசிசி ஒருநாள் போட்டிகளின் தரவரிசை பட்டியலில் முதலிடத்தை பெற்றுள்ளார். இந்த வடிவத்தில் 43 சதங்களையும் அவர் பூர்த்தி செய்துள்ளார்.

கவாஸ்கர் பாராட்டு

கவாஸ்கர் பாராட்டு

இந்நிலையில் கடந்த பத்தாண்டுகளில் ஒருநாள் போட்டிகளில் விராட் கோலியின் செயல்பாடு அணியில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார். கிரிக்கெட் கனெக்டட் நிகழ்ச்சிக்காக பேசிய அவர் விராட்டிற்கு பாராட்டு தெரிவித்துள்ளார்.

சேஸிங்கில் 26 சதங்கள்

சேஸிங்கில் 26 சதங்கள்

குறிப்பாக சேஸிங்கின்போது அவரது செயல்பாடு மிகவும் சிறப்பாக உள்ளதாகவும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார். ஒருநாள் போட்டிகளில் இதுவரை 43 சதங்களை விராட் கோலி பூர்த்தி செய்துள்ளார். அதில் 26 சதங்கள் சேஸிங்கில் அடிக்கப்பட்டவை. இதன்மூலம் தனது அணியின் வெற்றிக்காக அவர் முன்னால் நிற்பது புலப்படுவதாகவும் கூறினார்.

தாக்கம் சிறப்பானது

தாக்கம் சிறப்பானது

மேலும் இந்த சேஸிங்கின்மூலம் அவரது நிலையான ஆட்டமும் வெளிப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். தனிநபராக இருந்து இந்திய அணியின் வெற்றித் தருணங்களில் அவர் சிறப்பாக செயல்பட்டதையும் கவாஸ்கர் சுட்டிக் காட்டியுள்ளார். தான் ரன் குவிப்பை மட்டும் கருத்தில் கொள்ளவில்லை என்றும் அவரது தாக்கம் சிறப்பானது என்றும் மேலும் கூறினார்.

Story first published: Thursday, December 10, 2020, 23:01 [IST]
Other articles published on Dec 10, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+