For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

டெல்லியில் விராட் கோலிக்கு உள்ள சூப்பர் பவர்.. சுனில் கவாஸ்கர் எச்சரிக்கை..அட புள்ளிவிவரம் மிரட்டுதே

மும்பை: ஆஸ்திரேலிய அணியுடனான 2வது டெஸ்ட் போட்டியில் இந்திய வீரர் விராட் கோலிக்கு ஸ்பெஷல் சக்தி ஒன்று கிடைக்கவுள்ளதாக முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி ஆதிக்கம் செலுத்தி வருகிறது. நாக்பூரில் நடந்த முதல் டெஸ்டில் இன்னிங்ஸ் மற்றும் 132 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வென்றது.

இந்த போட்டியில் ரோகித் சர்மா அட்டகாசமான சதத்தை விளாசி கம்பேக் கொடுத்தார். மேலும் 3 வடிவ கிரிக்கெட்டிலும் சதமடித்த முதல் இந்திய கேப்டன் எனும் பெருமையையும் பெற்றார். இதே போல ரவீந்திர ஜடேஜா மற்றும் அக்‌ஷர் பட்டேல் ஆகியோர் அரைசதம் அடித்து அசத்தினர்.

விராட் கோலி ஃபார்ம்

விராட் கோலி ஃபார்ம்

எதிர்பார்க்காத பல வீரர்களும் முதல் டெஸ்டில் கலக்கிய சூழலில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட விராட் கோலி மட்டும் சொதப்பினார். ஆசிய கோப்பை மூலம் பழைய ஃபார்முக்கு திரும்பியுள்ள கோலி டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட் என 4 சதங்களை விளாசியுள்ளார். ஆனால் டெஸ்ட் கிரிக்கெட்டில் மட்டும் இன்னும் தனது சதத்தை அடிக்காமல் இருந்து வருகிறார். 2019ம் ஆண்டு வங்கதேசத்துக்கு எதிராக அடித்ததே கடைசி சதமாகும்.

கவாஸ்கர் விளக்கம்

கவாஸ்கர் விளக்கம்

இந்நிலையில் கோலி 2வது டெஸ்டில் எதிர்பார்க்காத ஆட்டத்தை கொடுப்பார் என சுனில் கவாஸ்கர் கூறியுள்ளார். இதுகுறித்து பேசிய அவர், ஒரே ஒரு டெஸ்ட் போட்டி தானே முடிந்துள்ளது. இன்னும் மீதம் 3 போட்டிகள் இருக்கின்றன. கோலி போன்ற வீரர் அனைத்து போட்டிகளிலும் அதிக ரன் அடிக்க வேண்டும் என்று தான் ரசிகர்கள் நினைப்பார்கள். எனினும் ஒரே ஒரு இன்னிங்ஸில் தானே ஆடியுள்ளார், பொறுத்திருங்கள்.

சொந்த ஊரில் சதம்

சொந்த ஊரில் சதம்

2வது டெஸ்ட் போட்டி டெல்லியில் நடைபெறுவதால், கோலி தனது சொந்த ஊரில் சதத்தை அடிப்பார் என தோன்றுகிறது. ஏனென்றால் அதிகம் பழகிய மைதானத்தில் பெரிய ஸ்கோர் அடிக்க அதிக வாய்ப்புகள் உள்ளதாக சுனில் கவாஸ்கர் கூறியுள்ளார். அவர் கூறுவதும் ஒருவகையில் உண்மை தான். ஏனென்றால் டெல்லி மைதானத்தில் இதற்கு முன்னர் கோலியின் பேட்டிங் உச்சகட்டத்தில் இருந்துள்ளது.

என்ன ஸ்பெஷல்

என்ன ஸ்பெஷல்

விராட் கோலி கடைசியாக கடந்த 2017ம் ஆண்டு டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் டெஸ்ட் கிரிக்கெட் ஆடினார். இலங்கைக்கு எதிரான அந்த போட்டியில் 287 பந்துகளை சந்தித்த விராட் கோலி 25 பவுண்டரிகளுடன் 243 ரன்களை விளாசினார். அப்போது விராட் கோலியின் சிறந்த டெஸ்ட் ஸ்கோர் அதுவாக தான் இருந்தது.

Story first published: Tuesday, February 14, 2023, 17:57 [IST]
Other articles published on Feb 14, 2023
English summary
Former Indian cricketer Sunil gavaskar sends virat kohli warning ahead of India vs australia 2nd test mach
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+