எல்லாத்துக்கும் அதே காரணம் சொல்லாதீர்கள்.. இளம் வீரர்களின் மோசமான செயல்பாடு.. கவாஸ்கர் கடும் விளாசல்
புனே: இலங்கை அணியுடனான 2வது டி20 போட்டியில் இந்திய அணியின் இளம் வீரர்கள் செய்த தவறுக்காக முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் கடுமையான விமர்சனத்தை முன்வைத்துள்ளார்.
இரு அணிகளுக்கும் இடையேயான இந்த போட்டி புனேவில் உள்ள கிரிக்கெட் சங்க மைதானத்தில் நடைபெற்றது. இதில் இந்தியா 16 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியிருந்தது.
முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 206 ரன்களை குவிக்க, அதனை விரட்டிய இந்திய அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்களை இழந்து 190 ரன்களை மட்டுமே எடுத்து தோல்வியை சந்தித்தது.

பந்துவீச்சில் சொதப்பல்
இந்த போட்டியில் இந்திய அணியின் தோல்வியை விட, இளம் வீரர்கள் செய்த சிறுபுள்ளை த்தனமான தவறுகளே பேசுப்பொருளாகியுள்ளது. இப்போட்டியில் இலங்கை அணி 8 ஓவர்களில் 80 ரன்களை விளாசியது. இதற்கு அடித்தளம் போட்டது அர்ஷ்தீப் சிங் தான். அவர் வீசிய 2வது ஓவரில் மட்டும் 3 முறை நோ பால்களை வீசி அதிர்ச்சி கொடுத்தார். இதனால் தேவையின்றி 13 ரன்கள் கூடுதலாக சென்றது. இதனால் அவருக்கு மீண்டும் 19வது ஓவரில் வாய்ப்பு தரப்பட்டது.

சாதனை
அதிலும் நோ பால் தொடர்ந்தது. 19வது ஓவரில் அர்ஷ்தீப் சிங் வீசிய பந்தில் ஷனகா ஆவுட்டானார். ஆனால் அந்த பந்து நோ பால் கொடுக்கப்பட்டது. இதன் மூலம் இந்திய அணியில் அதிக முறை நோபல் வீசியவர் என்ற பெருமையை பெற்றிருக்கிறார். ஷிவம் மாவி தனது பங்கிற்கு ஒரு நோ பாலை வீசியிருந்தார். இதனாலேயே இந்தியா பல ரன்களை இழந்து தோல்விக்கு வழிவகுத்துக்கொண்டது.

கவாஸ்கர் விளாசல்
இந்நிலையில் இதற்கு கவாஸ்கர் கடும் அதிருப்தியை தெரிவித்துள்ளார். அதில், தற்போதுள்ள வீரர்கள் நிலைமை எங்கள் கட்டுப்பாட்டில் இல்லை எனக்கூறுவதை கேட்டு வருகிறேன். நோ பால் வீசுவதெல்லாம் உங்கள் கட்டுப்பாட்டில் தான் உள்ளது. நீங்கள் வீசிய பிறகு, பேட்ஸ்மேன் என்ன செய்கிறார் என்பது வேறு விஷயம். ஆனால் கையில் இருந்து பந்து போவதில் இருந்து, காலை எங்கு எடுத்து வைக்கிறோம் என்பது உங்களின் கட்டுப்பாட்டில் தான் இருக்க வேண்டும். ஏதாவது ஒரு காரணத்தை கூறக்கூடாது என கவாஸ்கர் விளாசியுள்ளார்.

ரசிகர்களின் கேள்வி
டி20 உலகக்கோப்பையில் கலக்கிய அர்ஷ்தீப் சிங் காயம் காரணமாக விலகியிருந்தார். 2வது டி20 போட்டியின் போது தான் குணமடைந்து அணிக்குள் வந்துள்ளார். சரியான பயிற்சிகள் இல்லாதது இந்த நோ பால்-களுக்கு காரணமாக அமைந்ததாக கூறப்படுகிறது. அப்படி பார்த்தால், முழு உடற்தகுதி பெறாத வீரரை எதற்காக ப்ளேயிங் 11ல் சேர்த்தார்கள் என ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications