Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

“ஆஸ்திரேலியாவில் நடந்தால் நியாயம் ஆனால் இந்தியாவில் நடந்தால்..?”.. சுனில் கவாஸ்கர் ஆவேசம்

மும்பை: ஆஸ்திரேலியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி வெறும் 2 நாட்களில் முடிவடைந்த நிலையில், மெக்காய் மைதானத்தின் ஆடுகளத் தரம் மற்றும் ஐசிசியின் இரட்டை நிலைப்பாட்டை இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் கடுமையாக விமர்சித்துள்ளார்.

மெக்காய் நகரில் நடைபெற்ற இப்போட்டியில், வங்கதேச அணியை இன்னிங்ஸ் மற்றும் 51 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா வீழ்த்தியது. வங்கதேச அணி இரண்டு இன்னிங்ஸ்களிலும் முறையே 64 மற்றும் 95 ரன்களுக்குச் சுருண்டது. ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்களும் ரன் குவிக்கத் திணறிய நிலையில், கேமரூன் கிரீன் மட்டுமே 67 ரன்கள் ரன்கள் சேர்த்தார். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். வெறும் 750 பந்துகளோடு முடிவடைந்த இப்போட்டி, டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் 4 வது மிகக் குறைந்த பந்துகளில் முடிந்த ஆட்டமாகப் பதிவாகியுள்ளது.

Sunil Gavaskar Slams ICC Over Mackay Pitch Questions Double Standards on 2-Day Australia Test Match

இது குறித்து ஸ்போர்ட்ஸ்டார் இதழில் எழுதியுள்ள சுனில் கவாஸ்கர், "ஆஸ்திரேலியாவில் கடந்த சில ஆண்டுகளில் நான்கு டெஸ்ட் போட்டிகள் இரண்டு நாட்களில் முடிந்துள்ளன. ஆனால், அங்கிருக்கும் ஆடுகளங்கள் குறித்து இதுவரை எந்த விமர்சனமும் எழவில்லை. இதேபோன்று இந்தியாவில் ஒரு போட்டி 3 நாட்களில் முடிந்தால் கூட பிசிசிஐ மற்றும் ஆடுகளங்களை நோக்கி வசைபாடத் தொடங்கி விடுவார்கள். ஆஸ்திரேலியாவில் போட்டி 2 நாட்களில் முடிந்தால் 'பிட்ச் க்யூரேட்டர் வானிலை அறிக்கையைத் தவறாகக் கணித்துவிட்டார்' அல்லது 'பேட்ஸ்மேன்களுக்கு விளையாடத் தெரியவில்லை' எனப் பல்வேறு சாக்குப்போக்குகளைக் கூறுவார்கள்" என்று சாடியுள்ளார்.

மேலும், "டார்வின் நகரில் நடைபெற்ற முதல் டெஸ்டில் வங்கதேசத்திடம் படுதோல்வி அடைந்ததால் தான், ஆஸ்திரேலியா தங்களுக்குச் சாதகமாக மெக்காய் மைதானத்தில் வேகப்பந்து வீச்சுக்குச் சாதகமான பிட்சைத் தயாரித்தது. ஆனால், இதற்கும் அணி நிர்வாகத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை என அவர்கள் சாக்குப்போக்கு கூறுவார்கள். இந்திய அணி நிர்வாகம் தங்களுக்குச் சாதகமான ஆடுகளங்களை வெளிப்படையாகக் கேட்கிறது.

IND vs SL 2வது டெஸ்ட்.. 4வது நாளில் காத்திருக்கும் சிக்கல்.. இந்திய அணிக்கு பின்னடைவா?

IND vs SL 2வது டெஸ்ட்.. 4வது நாளில் காத்திருக்கும் சிக்கல்.. இந்திய அணிக்கு பின்னடைவா?

ஆனால், ஆஸ்திரேலியா போன்ற நாடுகள் மறைமுகமாகத் தங்களுக்குத் தேவையான வேகப்பந்து வீச்சு ஆடுகளங்களைத் தயாரித்துக் கொள்கின்றன. இப்போதைய சூழலில் மெக்காய் ஆடுகளத்திற்கு ஐசிசி 'மிகவும் சிறப்பானது' என தரமதிப்பீடு வழங்கும் எனத் தெரிகிறது. பழைய கிரிக்கெட் நாடுகளின் ஊடகங்களிடம் நல்ல பெயர் வாங்க வேண்டும் என்பதற்காகவே போட்டி நடுவர்கள் இவ்வாறு செய்கின்றனர். இந்த நயவஞ்சகம் மற்றும் இரட்டை நிலைப்பாடு மிகவும் ஆச்சரியமளிக்கிறது "என்று கவாஸ்கர் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

Story first published: Wednesday, August 26, 2026, 9:30 [IST]
Other articles published on Aug 26, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+