Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

“வேறு வார்த்தைகள் வந்துவிடும்”.. 2வது டெஸ்டில் கே.எல்.ராகுல் செய்த தவறு.. கவாஸ்கர் கடும் விளாசல்!

டாக்கா: இந்திய அணி கேப்டன் கே.எல்.ராகுல் மற்றும் ராகுல் டிராவிட் ஆகியோர் செய்த தவறு குறித்து சுனில் கவாஸ்கர் மிக மோசமாக விமர்சித்துள்ளார்.

இந்தியா - வங்கதேசம் அணிகளுக்கு இடையேயான 2வது டெஸ்ட் போட்டி இன்று டாக்காவில் உள்ள மைதானத்தில் தொடங்கியது. இதில் டாஸ் வென்ற வங்கதேசம் பேட்டிங்கை தேர்வு செய்தது.

2 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் இந்தியா 1 - 0 என முன்னிலையில் இருந்ததால் தொடரை கைப்பற்றும் முனைப்புடன் களமிறங்கியுள்ளது. அதற்காக அவர்கள் தேர்வு செய்த வீரர்கள் தான் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

ரசிகர்கள் அதிருப்தி

ரசிகர்கள் அதிருப்தி

முதல் டெஸ்டில் அஸ்வின், குல்தீப் யாதவ், அக்‌ஷர் பட்டேல் என 3 ஸ்பின்னர்கள் ப்ளேயிங் 11ல் இருந்தனர். ஆனால் 2வது போட்டிக்கான இந்திய ப்ளேயிங் 11ல் இருந்து சுழற்பந்துவீச்சாளர் குல்தீப் யாதவ் அதிரடியாக நீக்கப்பட்டார். அவருக்கு மாற்றாக ஜெய்தேவ் உனத்கட் வாய்ப்பு பெற்றிருந்தார். இதில் குல்தீப் நீக்கப்பட்டது தான் பிரச்சினையாக மாறியுள்ளது.

என்ன காரணம்

என்ன காரணம்

முதல் டெஸ்ட் போட்டியின் போது குல்தீப் யாதவ் முதல் இன்னிங்ஸில் 5, 2வது இன்னிங்ஸில் 3 என மொத்தம் 8 விக்கெட்களை கைப்பற்றியிருந்தனர். ஆட்ட நாயகன் விருதும் பெற்றிருந்தார். ஒரு வருடத்திற்கு பின் வந்து முதல் போட்டியிலேயே ஆட்ட நாயகன் விருது வென்ற வீரரை ஒதுக்கி வைப்பதா? என ரசிகர்கள் அதிருப்தியில் ஆழ்ந்துள்ளனர்.

 கவாஸ்கர் கடும் விளாசல்

கவாஸ்கர் கடும் விளாசல்

இந்நிலையில் சுனில் கவாஸ்கர் மிக மோசமாக விமர்சித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், ஆட்ட நாயகனை நீக்கியது நம்பவே முடியவில்லை. எனக்கு வேறு கடினமான வார்த்தைகளை கூறி திட்ட வேண்டும் என தோன்றுகிறது. ஆனால் அதனை கட்டுப்படுத்திக்கொண்டு டீசண்ட்டாக கூறுகிறேன். 20 விக்கெட்களில் 8 விக்கெட்களை கைப்பற்றிய வீரரை நீங்கள் ஒதுக்கியுள்ளீர்கள் என்பதை நியாபகம் வைத்துக்கொள்ளுங்கள்.

வேறு 2 ஸ்பின்னர்கள்

வேறு 2 ஸ்பின்னர்கள்

அணியில் வேறு 2 ஸ்பின்னர்களும் இருக்கின்றனர். அவர்களில் இருந்து யாரேனும் ஒருவரை நீக்கியிருக்கலாம். குல்தீப் நிச்சயம் ஆடியிருக்க வேண்டும். ஏனென்றால் டாக்கா போன்ற பிட்ச்-களில் குல்தீப் யாதவ் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியவர். இதனை ஏற்றுக்கொள்ளவே முடியாது என்பது போல சுனில் கவாஸ்கர் மிகவும் அதிருப்தியுடன் பேசியுள்ளர்.

முதல் இன்னிங்ஸின் முடிவு

முதல் இன்னிங்ஸின் முடிவு

இதுஒருபுறம் இருக்க, இந்த போட்டியில் குல்தீப் இல்லாமலும் இந்தியா சிறப்பாக செயல்பட்டுள்ளது. ரவிச்சந்திரன் அஸ்வின், ஜெய்தேவ் உனத்கட், உமேஷ் யாதவ் ஆகியோரின் பவுலிங்கில் சிக்கி வங்கதேசம் அடுத்தடுத்து விக்கெட்டை இழந்ததால் 227 ரன்களுக்கெல்லாம் அனைத்து விக்கெட்களையும் இழந்துள்ளது. அஸ்வின் 4 விக்கெட்களை கைப்பற்றி அசத்தியுள்ளார்.

Story first published: Thursday, December 22, 2022, 18:04 [IST]
Other articles published on Dec 22, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+